தோனியின் புதிய ஹேர் ஸ்டைல் சமூக வலைதளங்களில் செம வைரலாகிவருகிறது. 

இந்திய அணிக்காக 3 விதமான ஐசிசி கோப்பைகளையுமே(டி20 உலக கோப்பை, ஒருநாள் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி) வென்று கொடுத்து வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தவர் தோனி. 2019 உலக கோப்பைக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிராத தோனி, கடந்த ஆண்டு ஓய்வு அறிவித்தார். தற்போது ஐபிஎல்லில் மட்டும் ஆடிவருகிறார்.

தோனி எப்போதுமே அவரது ஹேர் ஸ்டைலுக்கு பெயர்போனவர். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானபோது, நீண்ட முடியுடன் தோற்றமளித்தார். அதே ஹேர் ஸ்டைலைத்தான் அடுத்த 3-4 ஆண்டுகளுக்கு வைத்திருந்தார். அதன்பின்னர் ஷார்ட்டாக வெட்டிவிட்டார். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு கட்டத்திலுமே தோனியின் ஹேர் ஸ்டைல் எப்போதுமே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவந்திருக்கிறது.

அந்தவகையில், தற்போது அவரது புதிய ஹேர் ஸ்டைல் ஒன்று செம வைரலாகிவருகிறது. மும்பையில் அலீம் ஹக்கீம் என்ற ஹேர் ஸ்டைலிஷ்ட் இருக்கிறார். அவரிடம் தான் பாலிவுட் பிரபலங்கள் சஞ்சய் தத், ஷாஹித் கபூர், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங் ஆகியோர் ஹேர் ஸ்டைல் செய்துகொள்வார்கள்.

அதே ஹேர் ஸ்டைலிஸ்ட்டான அலீம் ஹக்கீமிடம் தான் தோனியும் இந்த ஹேர் ஸ்டைலை செய்துகொண்டுள்ளார்.