Asianet News TamilAsianet News Tamil

MS Dhoni Brand Value: ஓய்வு பெற்ற பிறகும் குறையாத தோனியின் பிராண்ட் மதிப்பு; எத்தனை கோடி தெரியுமா?

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்று 4 ஆண்டுகள் ஆகியும் அவரது பிராண்ட் மதிப்பு குறையவில்லை. இது தொடர்பான ஒரு அறிக்கை இங்கே.

MS Dhoni brand Value Rs 766 Crores rsk
Author
First Published Aug 30, 2024, 9:48 PM IST | Last Updated Aug 30, 2024, 9:48 PM IST

மகேந்திர சிங் தோனி..! கிரிக்கெட் உலகின் சிறந்த கேப்டன். தோனி பல சாதனைகளைப் படைத்துள்ளார். இது அனைவருக்கும் தெரியும். ஆனால், கிரிக்கெட் மூலம் தோனி எத்தனை கோடிகளை சம்பாதித்தார், எதன் மூலம் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா..? அப்படியானால், இந்தக் கதையைப் பாருங்கள்.

ஓய்வு பெற்ற பிறகும் குறையாத தோனியின் பிராண்ட் மதிப்பு..!

எம்.எஸ். தோனி, கிரிக்கெட் உலகின் மாஸ்டர் மைன்ட். இந்திய கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன். தோனியின் அமைதியான குணம், உத்திகளைக் கையாளும் விதம், அழுத்தத்தைக் கையாளும் விதம் அனைவருக்கும் உத்வேகம். தோனியின் வெறித்தன ரசிகர்கள் பட்டாளம் பற்றி சொல்லவே வேண்டாம். ஐபிஎல் அதற்கு சாட்சி..! 

இம்பேக்ட் பிளேயர் ரூல் பற்றி தாறுமாறாக பேசிய அஸ்வின்: அப்படி என்ன தான் ஸ்பெஷல்?

சிஎஸ்கே நாட்டின் எந்த மூலையில் விளையாடச் சென்றாலும், அங்கு மஞ்சள் படையே குவிந்து கிடக்கும். அதற்குக் காரணம், ஒன் அண்ட் ஓன்லி தோனி. இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் தோனிக்கு ரசிகர்கள் உள்ளனர். கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ள மஹி, ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு அதிபதியாகவும் உள்ளார். 

ஆம், தற்போது உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்களில் தோனியும் ஒருவர். சமீபத்தில், ஒரு வணிக நிறுவனம் தோனியின் பிராண்ட் மதிப்பை மதிப்பிட்டது. இதன்படி தோனியின் பிராண்ட் மதிப்பு ரூ.766 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டிற்கு குட்பை சொல்லியுள்ள தோனி, ஐபிஎல்லில் மட்டுமே விளையாடுகிறார். சிஎஸ்கே தோனிக்கு ஆண்டுக்கு ரூ.12 கோடி சம்பளம் வழங்குகிறது. மேலும், 28க்கும் மேற்பட்ட முன்னணி பிராண்டுகளுக்கு தோனி பிராண்ட் அம்பாசிடராக உள்ளார். இந்த பிராண்டுகளின் ஒரு நாள் விளம்பரப் படப்பிடிப்புக்காக தோனி ரூ.4 முதல் ரூ.6 கோடி வரை சம்பளமாகப் பெறுகிறார்.

IPL 2025:  இன்னும் என்ன தான் பண்றது? 17 ஆண்டுகளாக ஐபிஎல் கோப்பைக்காக ஏங்கும் 3 அணிகள்

சமூக ஊடகங்கள் மூலமும் தோனி கோடிக்கணக்கான ரூபாய்களைப் பெறுகிறார். இன்ஸ்டாகிராமில் 40 மில்லியனுக்கும் அதிகமானோர் மற்றும் ஃபேஸ்புக்கில் 25 மில்லியனுக்கும் அதிகமானோர் தோனியைப் பின்தொறுகிறார்கள். இந்த இரண்டு கணக்குகள் மூலம் தோனி பல்வேறு பிராண்டுகளை விளம்பரப்படுத்துகிறார். இதற்காக, ஒவ்வொரு வணிகப் பதிவிற்கும் ரூ.1 முதல் ரூ.2 கோடி வரை கட்டணம் வசூலிக்கிறார். மேலும், தோனி விளையாட்டு மற்றும்ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் நூற்றுக்கணக்கான கோடிகளை முதலீடு செய்துள்ளார். சமீபத்தில், தோனி தனது சொந்த திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார். ஏற்கனவே தமிழில் ஒரு படத்தை தயாரித்துள்ளார். 

சரித்திர சாதனையோடு பாராலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பிரீத்தி பால்!

தோனியின் டேஹ்ராடூன் வீட்டின் மதிப்பு ரூ.17.8 கோடி..! 

தோனி தனது சொந்த ஊரான ராஞ்சி மற்றும் உத்தரகாண்டில் உள்ள டேராடூனில் தலா ஒரு வீட்டைக் கொண்டுள்ளார். டேராடூன் வீட்டின் மதிப்பு ரூ.17.8 கோடியாகவும், ராஞ்சியில் உள்ள பண்ணை வீட்டின் மதிப்பு ரூ.6 கோடியாகவும் உள்ளது.  ஆடி, ஹம்மர், லேண்ட் ரோவர், ஃபெராரி, மெர்சிடிஸ் பென்ஸ், ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட பல சொகுசு கார்களை மஹி வைத்துள்ளார். கார்கள் மட்டுமின்றி, பல்வேறு இறக்குமதி செய்யப்பட்ட பைக்குகளும் தோனியின் வீட்டு கேரேஜில் உள்ளன. என்னதான் இருந்தாலும், ஓய்வு அறிவித்து மூன்று ஆண்டுகள் ஆகியும் தோனியின் பிராண்ட் மதிப்பு குறையவில்லை.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios