Asianet News TamilAsianet News Tamil

#INDvsNZ டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசி.,யை வீழ்த்தி இந்தியா தான் ஜெயிக்கும் -இங்கிலாந்து முன்னாள் வீரர்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் எந்த அணி வெற்றி பெறும் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி பனேசர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

monty panesar opines india have more chance to win in icc world test championship final against new zealand
Author
England, First Published May 24, 2021, 10:48 PM IST

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஒருநாள் மற்றும் டி20 ஃபார்மட் போட்டிகளுக்கு உலக கோப்பையை நடத்தும் ஐசிசி, முதல் முறையாக டெஸ்ட் போட்டிக்கான சாம்பியன்ஷிப் தொடரை நடத்துகிறது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இறுதி போட்டிக்கு முந்தைய போட்டிகளின் முடிவில் புள்ளி பட்டியலில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் முதலிரண்டு இடங்களை பிடித்தன. இதையடுத்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மேட்ச் வரும் ஜூன் 18-22ல் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடக்கிறது.

ஃபைனலில் வெற்றி பெற்று முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் முனைப்பில் தான் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளுமே உள்ளன.  வலுவான இரு அணிகள் இறுதி போட்டியில் மோதுவதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.

இந்நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் வெற்றி வாய்ப்பு குறித்து பேசியுள்ள இங்கிலாந்து முன்னாள் ஸ்பின்னர் மாண்டி பனேசர், டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு முன் நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கு எதிராக ஆடும் 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றால், அது அந்த அணிக்கு கண்டிப்பாக பெரிய உத்வேகமாக அமையும். ஆனால் தோற்றால், அவர்களது நம்பிக்கை தளரும். அது இந்தியாவிற்கு கூடுதல் பலமாக அமையும். இங்கிலாந்து அணி அதன் பி டீமுடன் களமிறங்குவதால் போட்டி முடிவு என்னாகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

இந்திய அணி வெளிநாடுகளில் அபாரமாக ஆடி, எந்த கண்டிஷனிலும் வெற்றி பெற முடியும் என்று நிரூபித்திருக்கிறது. இந்தியா அளவிற்கு நியூசிலாந்து அணியும் நல்ல அணிதான் என்றாலும், வெளிநாடுகளில் பெரியளவில் வெற்றி பெற்றதில்லை. கடினமான கண்டிஷன்களில் வெற்றி பெறுவதுதான் ஒரு டாப் அணி என்று மாண்டி பனேசர் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios