Asianet News TamilAsianet News Tamil

#ICCWTC ஃபைனல்: அவரு மட்டும் இந்தியாவில் ஆடுற மாதிரி ஆடினால் வெற்றி இந்தியாவுக்குத்தான் - மாண்டி பனேசர்

அஷ்வின் இடது கை பேட்ஸ்மேன்களை வழக்கம்போலவே எளிதாக வீழ்த்தினால் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி பனேசர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

monty panesar opines if ashwin shines he will be the match winner in icc world test championship final
Author
England, First Published Jun 9, 2021, 7:37 PM IST

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரும் 18-22ல் சவுத்தாம்ப்டனில் நடக்கிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் ஃபைனலில் மோதுகின்றன.

சமபலம் வாய்ந்த இரு அணிகளும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் மோதுவதால் அந்த போட்டியின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இரு அணிகளுமே மிகச்சிறந்த வீரர்களை கொண்ட மற்றும் பேட்டிங், பவுலிங் ஆகியவற்றில் சமபலத்துடன் திகழும் அணிகள் ஆகும். இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, புஜாரா, ரஹானே, ரிஷப் பண்ட் என வலுவான பேட்டிங் ஆர்டர் இருக்கிறது என்றால் நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன், ரோஸ் டெய்லர், டாம் லேதம், கான்வே, ஹென்ரி நிகோல்ஸ் என சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

இந்திய அணியில் பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, அஷ்வின், சிராஜ், ஜடேஜா ஆகியோர் என்றால், நியூசிலாந்து அணியில் டிம் சௌதி, டிரெண்ட் போல்ட், கைல் ஜாமிசன், இஷ் சோதி, ஃபெர்குசன் ஆகியோர் உள்ளனர்.  இப்படியாக இரு அணிகளும் மிகச்சிறந்த வீரர்களை கொண்ட சமபலம் வாய்ந்த சிறந்த அணிகள் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் குறித்து பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துவரும் நிலையில், இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி பனேசர், அஷ்வின் ஜொலித்தால் வெற்றி இந்தியாவுக்குத்தான் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மாண்டி பனேசர், நியூசிலாந்து சிறந்த அணி. கான்வே சிறப்பாக ஆடிவருகிறார். நியூசிலாந்தில் நிறைய இடது கை வீரர்கள் உள்ளனர். அஷ்வின் இடது கை பேட்ஸ்மேன்களை எளிதில் வீழ்த்தக்கூடியவர். எனவே இந்திய அணியின் பிரைம் ஸ்பின்னராக அவர்தான் இருப்பார். ஜடேஜாவையும் கேப்டன் கோலி அணியில் எடுப்பார். 

ஆனால் அஷ்வின் தான் முதன்மை ஸ்பின் சாய்ஸாக இருப்பார். இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டியாக இது அமையும். இந்திய அணிக்கு இது எளிய போட்டியாக அமையாது. இங்கிலாந்து கண்டிஷன் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும். நியூசிலாந்து அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் அதிகமாக இருப்பதால் அவர்களை எளிதாக வீழ்த்தவல்ல அஷ்வின் மேட்ச் வின்னராக ஜொலிக்க வாய்ப்புள்ளது. இந்தியாவில் வீசுவதை போல் அஷ்வின் பந்துவீசினால் இந்திய அணிக்கு அது பெரும் பலமாக அமையும்.

அஷ்வின் இடது கை பேட்ஸ்மேன்களை எளிதாக வீழ்த்தினால் நியூசிலாந்து அணிக்கு அது பெரும் சிக்கலாக அமையும். அதேவேளையில், அஷ்வின் ஜொலிக்காத பட்சத்தில், அது இந்திய ஃபாஸ்ட் பவுலர்கள் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் என்று மாண்டி பனேசர் தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios