Asianet News TamilAsianet News Tamil

#ICCWTC ஃபைனல்: நியூசி., பேட்ஸ்மேன்களை மிரட்டி விக்கெட்டுகளை வீழ்த்திய ஷமி.. ஒரே செசனில் மாறிய மேட்ச்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் 5ம் நாள் ஆட்டத்தின் முதல் செசனில் நியூசிலாந்தின் 3 விக்கெட்டுகள் விழுந்தன.
 

mohammed shami turns the icc wtc final match for india in 5th day play first session
Author
Southampton, First Published Jun 22, 2021, 6:23 PM IST

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் கடந்த 18ம் தேதி தொடங்கியிருக்க வேண்டியது. இந்தியா - நியூசிலாந்து இடையேயான இந்த போட்டி, மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டது. 2ம் நாள்தான் போட்டி தொடங்கியது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 217 ரன்களுக்கு சுருண்டது.

இதையடுத்து 3ம் நாள் ஆட்டமான நேற்றைய ஆட்டத்தின் 2வது செசனில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில்  2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் அடித்திருந்தது. வில்லியம்சனும் ரோஸ் டெய்லரும் களத்தில் இருந்த நிலையில், 3ம் நாள் ஆட்டம் முடிந்த நிலையில், 4ம் நாளான நேற்றைய ஆட்டம் முழுவதுமே மழையால் ரத்தானது.

5ம் நாளான இன்றைய ஆட்டமும் மழையால் ஒரு மணி நேரம் தாமதமாக 4 மணிக்கு தொடங்கியது. இன்றைய ஆட்டத்தில் முதல் செசனில் குறைந்தது 3 விக்கெட்டாவது இந்திய அணி வீழ்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அதனால் மிகவும் டைட்டாக நல்ல லைன் & லெந்த்தில் பந்துவீசினர். ரன்னே கொடுக்காமல் டைட்டாக பந்துவீசி நெருக்கடியை அதிகரித்தனர். வில்லியம்சன், டெய்லர் ஆகிய இருவருமே ரன் அடிக்க முடியாமல் திணறினர். 14 ஓவரில் வெறும் 16 ரன்கள் மட்டுமே அடித்திருந்த நிலையில், எப்படியாவது ரன் அடித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் அடித்து ஆட முயற்சித்து ஷமியின் பந்தில் ஷுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் டெய்லர்.

அதன்பின்னர் களத்திற்கு வந்த ஹென்ரி நிகோல்ஸை இஷாந்த் சர்மா வீழ்த்த, வாட்லிங்கை வெறும் ஒரு ரன்னில் க்ளீன் போல்டாக்கி அனுப்பினார் ஷமி. இதையடுத்து 5ம் நாளான இன்றைய ஆட்டத்தின் முதல் செசனில் 3 விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து அணி.

அபாரமாக பந்துவீசிய ஷமி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு வெற்றி நம்பிக்கையை உருவாக்கி கொடுத்தார். உணவு இடைவேளை வரை நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் அடித்துள்ளது. கேன் வில்லியம்சனும் காலின் டி கிராண்ட் ஹோமும் களத்தில் உள்ளனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios