Asianet News TamilAsianet News Tamil

#ENGvsIND இங்கிலாந்து பேட்டிங் ஆர்டரை சரித்த முகமது ஷமி..! நங்கூரம் போட்ட ஜோ ரூட் அரைசதம்

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் பேட்டிங் ஆர்டரை முகமது ஷமி தனது வேகத்தில் சரித்துவிட்டார்.
 

mohammed shami penetrates england batting order and takes 3 consecutive wickets in first test
Author
Nottingham, First Published Aug 4, 2021, 9:03 PM IST

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. நாட்டிங்காமில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணி ஷமி, பும்ரா, சிராஜ் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகிய 4 ஃபாஸ்ட் பவுலர்கள் மற்றும் ஸ்பின்னர் ஜடேஜா என 5 பவுலர்களுடன் களமிறங்கியது.

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸும் டோமினிக் சிப்ளியும் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே ரோரி பர்ன்ஸை ரன்னே அடிக்கவிடாமல் டக் அவுட்டாக்கி அனுப்பினார் பும்ரா. இதையடுத்து சிப்ளியுடன் ஜோடி சேர்ந்து ஜாக் க்ராவ்லி, அருமையாக ஆடினார். 

சிப்ளியும் க்ராவ்லியும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அருமையாக ஆடினர். 2வது விக்கெட்டுக்கு இவர்கள் இருவரும் இணைந்து 42 ரன்களை சேர்த்தனர். 2வது விக்கெட்டுக்காக இந்திய அணி காத்திருந்த நிலையில், க்ராவ்லியை 27 ரன்னில் வீழ்த்தி பிரேக் கொடுத்தார் சிராஜ்.

முதல் செசன் முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் அடித்திருந்த நிலையில், 2வது செசனில் தொடக்க வீரர் சிப்ளியை 18 ரன்னில் வீழ்த்தி, தனது விக்கெட் கணக்கை தொடங்கினார் ஷமி. அதன்பின்னர் பேர்ஸ்டோவை 29 ரன்னிலும், லாரன்ஸை ரன்னே அடிக்கவிடாமலும் வீழ்த்திய ஷமி தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, இங்கிலாந்தின் பேட்டிங் ஆர்டரை சரித்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய கேப்டன் ஜோ ரூட் அரைசதம் கடந்து களத்தில் உள்ளார்.

இதையடுத்து ஜோஸ் பட்லரை பும்ரா டக் அவுட்டாக்கி அனுப்ப, 145 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இங்கிலாந்து அணி.  ரூட்டுடன் சாம் கரன் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios