IND vs ENG: பேட்டிங்கில் ரோகித், சூர்யகுமார் பொறுப்பான ஆட்டம், பவுலிங்கில் மாஸ் காட்டிய ஷமி, பும்ரா, குல்தீப்!

இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சால் இங்கிலாந்து வீரர்கள் பேட்டிங்கில் தடுமாறி வருகின்றனர்.

Mohammed Shami, Kuldeep Yadav, Jasprit Bumra Shows their Mass Performance in Bowling, England Players Struggle to socre runs rsk

லக்னோவில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 29ஆவது லீக் போட்டி நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசியது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், அதிகபட்சமாக ரோகித் சர்மா 87 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 49 ரன்களும் எடுக்கவே இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 229 ரன்கள் குவித்தது.

India vs England: உலகக் கோப்பையில் மோசமான சாதனை படைத்த விராட கோலி; இங்கிலாந்திற்கு எதிராக 11 முறை டக் அவுட்!

பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் மலான் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், மலான் 16 ரன்கள் எடுத்திருந்த போது ஜஸ்ப்ரித் பும்ரா பந்தில் கிளீன் போல்டானார். அடுத்து வந்த ஜோ ரூட் கோல்டன் டக் முறையில் பும்ரா பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து இங்கிலாந்தின் சிறந்த ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் 10 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஷமி பந்தில் கிளீன் போல்டானார்.

பொறுமையாக விளையாடிய ரோகித் சர்மா – கைவிட்ட கிங் கோலி; 50 ஓவர்களில் 229 ரன்கள் எடுத்த இந்தியா!

அடுத்து வந்த கேப்டன் ஜோஸ் பட்லர் 10 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்து நடையை கட்டினார். அப்போது இங்கிலாந்து 15.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து வந்த மொயீன் அலி 15 ரன்களில் ஷமி பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

IND vs ENG: முன்னாள் சுழல் ஜாம்பவான் மறைவு: கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடிய வீரர்கள்!

அதன் பிறகு வந்த கிறிஸ் வோக்ஸ் 10 ரன்களில் ரவீந்திர ஜடேஜா பந்தில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். இவரைத் தொடர்ந்து லியாம் லிவிங்ஸ்டன் 27 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆனால், அதற்கு முன்னதாவே குல்தீப் யாதவ் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் லியாம் லிவிங்ஸ்டன் ஆட்டமிழக்க வேண்டியது. நடுவரிடம் அப்பீலும் கேட்கவில்லை, ரெவியூவும் எடுக்கப்படவில்லை. ஆதலால், அவர் அப்போதே அவுட்டிலிருந்து தப்பித்தார். எனினும், குல்தீப் யாதவ் பந்திலேயே கடைசியாக ஆட்டமிழந்துள்ளார். தற்போது வரையில் இங்கிலாந்து 8 விக்கெட் இழந்து 117 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

Bishan Singh Bedi: இந்திய அணியின் சுழற்பந்து ஜாம்பவான் பிஷன் சிங் பேடி காலமானார்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios