பந்துவீச்சைப் பொறுத்தவரையில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஷமிதான் அதிக டார்ச்சர் கொண்டவர் என்று வர்ணனையாளர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. ஏற்கனவே நாக்பூர் மைதானத்தில் நடந்து முடிந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் மட்டும் தான்.
நாக்பூர் டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், 2ஆவது இன்னிங்ஸில் அஸ்வின் 5 விக்கெட் கைப்பற்றி வெற்றிக்கு வித்திட்டார். 20 விக்கெட்டுகளில் ஸ்பின்னர்களே 15 விக்கெட்டுகளை கைப்பற்ற்றினர். இதில், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் சிராஜ் இருவரும் தங்களது பங்கிற்கு எதிரணி வீரர்களை திணற வைத்தனர்.
இந்த நிலையில், ஷமி குறித்து வர்ணனையாளரான தினேஷ் கார்த்திக் முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது, ஒரு டார்ச்சர்க்காரர். வலை பயிற்சியின் போது நான் எதிர்கொண்ட பந்து வீச்சாளர்களில் மிகவும் கடினமான பந்து வீச்சாளர் யார் என்றால் அது ஷமி தான். வலை பயிற்சியில் அவரை எதிர்த்து விளையாடுவது என்பது மிகவும் கடினம் தான்.
நான் மட்டுமல்ல, இந்திய கிரிக்கெட் அணியின் ரோகித் சர்மா, விராட் கோலியும் கூட ஷமிக்கு எதிராக ஆடக் கூடாது என்று தான் சொல்வார்கள். அவர் எப்போதும் கைகளை நேராக வைத்து பந்து வீசக் கூடியவர். 6 முதல் 8 மீட்டர் லெந்துகளில் தான் பந்து வீசுவார். இதனால், பெருமாலும் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆகும், இல்லையென்றால் ஸ்லிப்பில் நிற்பவரிடம் கேட்ச் ஆகும். சில நேரங்களில் இதுவே பாதகமாக கூட அமைந்து விடுகிறது. அதிக பவுன்சராகும் வாய்ப்பு கூட வரும் என்று கூறியுள்ளார்.
