Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவிற்கு எதிரா கடந்த கால தோல்விகளுக்கு இதுதான் காரணம்.. அந்த தவறை இப்ப செய்யமாட்டோம் - முகமது ரிஸ்வான்

இந்தியாவிற்கு எதிரான போட்டியை மற்ற அணிகளுக்கு எதிரான போட்டிகளை போலவே பார்ப்போமே தவிர, வித்தியாசமோ ஸ்பெஷலோ கிடையாது என்று பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் கூறியுள்ளார்.
 

mohammad rizwan speaks about india vs pakistan match in t20 world cup
Author
Pakistan, First Published Oct 9, 2021, 9:35 PM IST

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி என்றாலே அனல் பறக்கும். இரு அணி வீரர்களும் வெற்றி வேட்கையுடன் மிகத்தீவிரமாக விளையாடுவார்கள். கிரிக்கெட்டில் எதிரி அணிகளான இந்தியாவும் பாகிஸ்தானும், கடந்த சில ஆண்டுகளாக ஐசிசி தொடர்களில் மட்டுமே மோதிக்கொள்கின்றன. 

இரு அணிகளும் இருதரப்பு அல்லது முத்தரப்பு தொடர்களில் எல்லாம் ஆடுவதில்லை. எனவே இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியை ஐசிசி தொடர்களில் மட்டுமே பார்க்கமுடியும்.

உலக கோப்பையில் இதுவரை இந்தியாவை பாகிஸ்தான் அணி வீழ்த்தியதேயில்லை. ஒருநாள் உலக கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை என எந்தவிதமான உலக கோப்பை தொடரிலும் இந்தியாவை ஒரு போட்டியில் கூட வீழ்த்தியதில்லை என்ற மோசமான ரெக்கார்டை வைத்திருக்கும் பாகிஸ்தான் அணிக்கு, அதனாலேயே உலக கோப்பை தொடரில் இந்தியாவை எதிர்கொள்ளும்போது பாகிஸ்தான் அணி மீதான அழுத்தமும் நெருக்கடியும் அதிகமாக இருக்கும். அந்த அழுத்தத்தினாலேயே அந்த அணிக்கு இந்தியாவை எதிர்கொள்வதென்றால், ஒருவித பயமும் பதற்றமும் தொற்றிக்கொள்ளும். அதனால் இந்தியாவிடம் தோல்வியும் அடைந்துவிடும்.

டி20 உலக கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் சூப்பர் 12 பிரிவில் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ள நிலையில், வரும் 24ம் தேதி நடக்கும் போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன. உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான வின்னிங் ரெக்கார்டை தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் இந்திய அணியும், அந்த ரெக்கார்டை தகர்க்கும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும் மோதவுள்ளன.

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் இந்த போட்டி குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான், இந்தியாவிற்கு எதிரான போட்டியை மற்ற போட்டிகளை போலவே பார்ப்போம். இந்தியா - பாகிஸ்தான் போட்டியை சமூக வலைதளங்களும் ரசிகர்களுமே மிகைப்படுத்துகின்றனவே தவிர, பிளேயர்களான எங்களை பொறுத்தவரை, மற்ற போட்டிகளை போலவே இந்தியாவிற்கு எதிரான போட்டியும். அதை மட்டும் தனித்து பார்த்து முக்கியத்துவம் கொடுத்தால், அது அதிகமான அழுத்தத்தை ஏற்படுத்திவிடும். இதற்கு முன், இந்தியாவிற்கு எதிரான போட்டிகள் அழுத்தத்தை அதிகரித்ததால்தான் பாகிஸ்தான் தோல்வியடைய நேர்ந்தது. எனவே அது இப்போது நடக்காது என்று முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios