Asianet News TamilAsianet News Tamil

என் கெரியரில் எனக்கு தொல்லை கொடுத்த 3 பேட்ஸ்மேன்கள் இவங்கதான்! ஆமீர் அதிரடி.. லிஸ்ட்டில் ஒரு இந்தியர் கூட இல்ல

தன் கெரியரில் மிகச்சவாலாக இருந்த 3 பேட்ஸ்மேன்கள் யார் யார் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் முகமது ஆமீர் தெரிவித்துள்ளார்.
 

mohammad amir picks 3 toughest batsmen he has bowled to
Author
Pakistan, First Published Mar 19, 2021, 4:48 PM IST

பாகிஸ்தான் அணி எல்லா காலக்கட்டத்திலும் சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களை பெற்றிருக்கிறது. வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷோயப் அக்தர், முகமது ஆமீர், முகமது சமி, முகமது ஆசிஃப், வஹாப் ரியாஸ் என அந்தந்த காலக்கட்டத்தில் சிறந்த பவுலர்களை பெற்றிருந்த அணி பாகிஸ்தான் அணி. 

அந்தவகையில், அப்படியான சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர் முகமது ஆமிர். முகமது ஆமீர் பாகிஸ்தான் அணியின் சீனியர் நட்சத்திர பவுலர். அருமையான ஃபாஸ்ட் பவுலரான ஆமீர், 2010ம் ஆண்டு ஸ்பாட் ஃபிக்ஸிங் புகாரில் சிக்கி 5 ஆண்டு தடை பெற்றார். 

mohammad amir picks 3 toughest batsmen he has bowled to

5 ஆண்டு கால தடைக்கு பிறகு மீண்டும் பாகிஸ்தான் அணியில் கம்பேக் கொடுத்த முகமது ஆமீர், கடந்த ஆண்டு இறுதியில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வறிவித்தார். 36 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள முகமது ஆமீர் 119 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 61 ஒருநாள் போட்டிகளில் ஆடி 81 விக்கெட்டுகளையும் 50 டி20 போட்டிகளில் ஆடி 59 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 

சிறந்த ஃபாஸ்ட் பவுலரான ஆமீர், தனது கிரிக்கெட் கெரியரில் தனக்கு சவாலாக இருந்த பேட்ஸ்மேன்கள் யார் யார் என்று தெரிவித்துள்ளார்.

mohammad amir picks 3 toughest batsmen he has bowled to

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முகமது ஆமீர், 2009ல் எனது கெரியரின் ஆரம்ப காலக்கட்டத்தில் ஷேன் வாட்சன் எனக்கு ரொம்ப தொல்லை கொடுத்தார். அது, அவரது கெரியரில் அவர் பீக்கில் இருந்த நேரம். அதனால் எனது பந்தை அனைத்து திசைகளிலும் தெறிக்கவிட்டார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் ஜோனாதன் டிராட், சவாலாக இருந்தார். சமீபத்தில் ஸ்டீவ் ஸ்மித், அவரது வித்தியாசமான பேட்டிங் டெக்னிக்கால் சவாலாக இருந்தார் என்று ஆமீர் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios