Asianet News TamilAsianet News Tamil

PAK vs ENG 2வது டி20: மொயின் அலி காட்டடி அரைசதம்..! பாகிஸ்தானுக்கு கடின இலக்கை நிர்ணயித்த இங்கிலாந்து

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 20 ஓவரில் 199 ரன்களை குவித்த இங்கிலாந்து அணி, 200 ரன்கள் என்ற கடின இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்துள்ளது.
 

moeen ali fifty helps england to set tough target to pakistan in second t20
Author
First Published Sep 22, 2022, 10:07 PM IST

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டி20 போட்டியில் அபார வெற்றி பெற்று இங்கிலாந்து அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

சொந்த மண்ணில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தை பழிதீர்க்கும் முனைப்பில் 2வது டி20 போட்டியில் களமிறங்கியது. கராச்சியில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மொயின் அலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையும் படிங்க - இந்திய அணி கேப்டன் ரோஹித், பயிற்சியாளர் டிராவிட் மீது பிசிசிஐ தலைவர் கங்குலி அதிருப்தி..?

இங்கிலாந்து அணி:

ஃபிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மலான், பென் டக்கெட், ஹாரி ப்ரூக், மொயின் அலி (கேப்டன்), சாம் கரன், டேவிட் வில்லி, லூக் உட், லியாம் டாவ்சன், அடில் ரஷீத்.

பாகிஸ்தான் அணி:

முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), பாபர் அசாம் (கேப்டன்), ஹைதர் அலி, ஷான் மசூத், இஃப்டிகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது நவாஸ், உஸ்மான் காதிர், ஹாரிஸ் ராஃப், முகமது ஹஸ்னைன், ஷாநவாஸ் தஹானி.

முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் அலெக்ஸ் ஹேல்ஸ் 26 ரன்களும், ஃபிலிப் சால்ட் 30 ரன்களும் அடித்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். டேவிட் மலான் முதல் பந்திலேயே டக் அவுட்டானார். 

இதையும் படிங்க - பென் ஸ்டோக்ஸ் வேற லெவல் ஆல்ரவுண்டர்ங்க.. பாண்டியா அந்தளவுக்குலாம் ஒர்த் இல்ல..! முன்னாள் வீரர் அதிரடி

4ம் வரிசையில் இறங்கிய பென் டக்கெட் அதிரடியாக பேட்டிங் ஆடி 22 பந்தில் 7 பவுண்டரிகளுடன் 43 ரன்களை விளாசினார். ஹாரி ப்ரூக் 19 பந்தில் 31 ரன்களும், அடித்து ஆடிய கேப்டன் மொயின் அலி, 22 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 55 ரன்களை குவிக்க, 20 ஓவரில் 199 ரன்களை குவித்த இங்கிலாந்து அணி, 200 ரன்கள் என்ற கடின இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios