நம்பர் 1 அணியாக திகழும் டி20 ஃபார்மட்டில், முக்கியமான வீரர்கள் இல்லாத இலங்கை அணியிடம் 3 போட்டிகளிலும் தோற்றது, அந்த அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற மிஸ்பா உல் ஹக்கை பயங்கர கடுப்பாக்கியது. முக்கியமான வீரர்கள் இல்லாத இலங்கை அணியிடம் ஒயிட்வாஷ் ஆனால், நம்ம எப்படி நம்பர் 1 டி20 டீம்? என கடுமையாக சாடியிருந்தார். பாபர் அசாம் சரியாக ஆடவில்லை என்றால் நமது லெட்சணம் இதுதான் என்றும் மிஸ்பா சாடியிருந்தார். 

இந்நிலையில், பாகிஸ்தான் அணியில் சில வீரர்கள் சரியாக ஒத்துழைப்பதில்லை என்பதால் மிஸ்பா உல் ஹக் செம கடுப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நெருங்கிய வட்டாரத்தில் ஒருவர் பேசிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் அணியின் சில வீரர்கள், அணி நிர்வாகத்தின் அறிவுரைகளை பின்பற்றுவதில்லை. சரியாக பயிற்சி மேற்கொள்ளாதது மட்டுமல்லாமல், ஃபிட்னெஸில் கவனம் செலுத்துவதில்லை. பயிற்சியின் போது ரொம்ப அலட்சியமாக இருக்கிறார்கள். கேப்டன் சர்ஃபராஸ் அகமது இதையெல்லாம் தட்டிக்கேட்க தயங்குகிறார்.

பயிற்சியில் கலந்துகொள்ளாமல் இருக்க சில வீரர்கள் அடிக்கடி அனுமதி கேட்பது மிஸ்பாவை அதிருப்தியடைய செய்கிறது. ஹாரிஸ் சொஹைல் பயிற்சி மேற்கொள்ளாமல் ஓப்பி அடிப்பதுடன் தேவையில்லாத விஷயங்களில் நேரத்தை வீணடிக்கிறார். இவையனைத்தையும் கடந்து சில வீரர்களிடம் ஒழுக்கமே இல்லை. இவற்றையெல்லாம் கண்டு கொதிப்படைந்திருக்கிறார் மிஸ்பா என்று அவர் தெரிவித்துள்ளார்.