IPL 2024: உண்மையை மறுக்க முடியாது – டீமுல தான் இல்ல ஒரு ஸ்டோரிய போடுவோம் – ருதுராஜூக்கு ஸ்கை வாழ்த்து!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சூர்யகுமார் யாதவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடப்பு ஆண்டுக்கான 17ஆவது சீசன் நாளை சென்னையில் பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இந்த சீசனுக்காக ஒவ்வொரு அணியிலும் பலவிதமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பல வீரர்கள் காயம் காரணமாக வெளியேறிய நிலையில் ஏலம் எடுக்கப்படாத வீரர்கள் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் தொடருக்கு முன்னதாக நழுவி சென்றனர்.
கேப்டன்கள், பயிற்சியாளர்கள் மாற்றப்பட்டனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டார். ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏராளமான விமர்சனம் அவர் மீது எழுந்தது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். கொல்கத்தா அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் திரும்ப வந்துள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கேப்டனாக ரிஷப் பண்ட் உறுதி செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், தான் எம்.எஸ்.தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் ருதுராஜ் கெய்க்வாட் ஆரம்பத்தில் ரூ.20 லட்சத்திற்கு ஆரம்பித்து, 2022 ஆம் ஆண்டு முதல் ரூ.6 கோடிக்கு சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரையில் 52 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 1797 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதம், 14 அரைசதங்கள் அடங்கும். 159 பவுண்டரி, 73 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். மேலும் கடந்த சீசனில் 16 போட்டிகளில் விளையாடி
இந்த நிலையில் தான் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சூர்யகுமார் யாதவ் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: உண்மையை மறுக்க முடியாது. அமைதியான குணம் மற்றும் பொறுமை மூலமாக சிஎஸ்கே அணியின் புகழ் மற்றும் பாரம்பரியத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வாய் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. குட் லக் என்று வாழ்த்தியுள்ளார்.
Instagram story by Suryakumar Yadav for Captain Ruturaj Gaikwad. pic.twitter.com/U4rxSXit8n
— Johns. (@CricCrazyJohns) March 21, 2024
இதே போன்று மும்பை இந்தியனஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா தன் பங்கிற்கு தோனியின் புகைப்படத்தை பகிர்ந்து ஒய் பிளட் சேம் பிளட் என்பது போன்று, இரு கைகளும் இணைவது போன்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலமாக தன்னை தூக்கியது போன்று உங்களையும் கேப்டன் பொறுப்பிலிருந்து தூக்கிட்டாங்க என்று சொல்லாமல் சொல்லியுள்ளார்.