இங்கிலாந்தில் நடந்துவரும் டி20 பிளாஸ்ட் தொடரில் சோமர்செட் மற்றும் மிடில்செக்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சோமர்செட் அணியின் கேப்டன் டாம் ஆபெல் சதமடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் 101 ரன்களை குவித்தார். தொடக்க வீரர் டாம் பாண்ட்டன் 62 ரன்கள் அடித்தார். இவர்கள் இருவரின் அதிரடியால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 226 ரன்களை குவித்தது. 

227 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய மிடில்செக்ஸ் அணி, இயன் மோர்கனின் காட்டடியால், 17வது ஓவரிலேயே இலக்கை எட்டி எளிதாக வெற்றி பெற்றது. மோர்கன் 29 பந்துகளில் 83 ரன்களை குவித்து மிரட்டினார். 

மிடில்செக்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் மாலனும் ஸ்டிர்லிங்கும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். மாலன் 14 பந்துகளில் 41 ரன்களும் ஸ்டிர்லிங் 10 பந்துகளில் 25 ரன்களும் அடித்தனர். டிவில்லியர்ஸும் அதிரடியாக ஆடி 16 பந்துகளில் 32 ரனக்ள் அடித்தார். ஹஃபீஸ் மட்டுமே பெரிதாக சோபிக்காமல் 16 பந்துகளில் 18 ரன்கள் அடித்தார். 

ஹஃபீஸை தவிர மற்ற 3 பேரும் அதிரடியாக ஆடி நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். மிடில்செக்ஸ் அணி 10 ஓவரில் 128 ரன்கள் அடித்திருந்தது. அதன்பின்னர் தாறுமாறாக அடித்து ஆடிய இயன் மோர்கன், சிக்ஸர் மழை பொழிந்தார். ரசிகர்களுக்கு வாணவேடிக்கை நிகழ்த்தி காட்டினார். வெறும் 29 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 83 ரன்களை குவித்து, 17வது ஓவரிலேயே இலக்கை எட்டி போட்டியை முடித்துவைத்துவிட்டார். 

இந்த போட்டியில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த டிவில்லியர்ஸின் கேட்ச்சை அவரது பாணியிலேயே அபாரமாக கேட்ச் பிடித்தார் மேக்ஸ் வாலர். அந்த வீடியோ இதோ..