Asianet News TamilAsianet News Tamil

IPL 2022: தவறுதலா கொடுக்கப்பட்ட அவுட்.. டிரெஸிங் ரூமில் வெறியாட்டம் ஆடிய மேத்யூ வேட்..! வைரல் வீடியோ

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் வீரர் மேத்யூ வேடுக்கு தவறுதலாக அவுட் கொடுக்கப்பட்டதால் கடும் அதிருப்தியடைந்த மேத்யூ வேட், டிரெஸிங் ரூமில் ஹெல்மெட்டை விட்டு எறிந்து பேட்டை அடித்து உடைத்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

matthew wade throws his helmet and smashes his bat in dressing room after controversial dismissal against rcb in ipl 2022
Author
Mumbai, First Published May 20, 2022, 6:00 PM IST

ஐபிஎல் 15வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆர்சிபி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவரில் 168 ரன்கள் அடித்தது.

குஜராத் அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 62 ரன்கள் அடித்தார். ரிதிமான் சஹா 31 ரன்களும், டேவிட் மில்லர் 34 ரன்களும் அடிக்க, நன்றாக தொடங்கிய மேத்யூ வேட் 16 ரன்களுக்கு துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.

169 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆர்சிபி அணி, விராட் கோலியின் அதிரடி அரைசதம்(54 பந்தில் 73 ரன்கள்) மற்றும் மேக்ஸ்வெல்லின் அதிரடியால் 19வது ஓவரிலேயே இலக்கை அடித்து அபார வெற்றி பெற்றது.

இந்த சீசனில் கிடைத்த வாய்ப்புகளில் பெரிதாக சோபிக்காத குஜராத் டைட்டன்ஸ் வீரர் மேத்யூ வேட், இந்த போட்டியில் நன்றாகவே தொடங்கினார். ஆனால் மேக்ஸ்வெல்லின் பந்தில் தவறுதலாக எல்பிடபிள்யூ கொடுக்கப்பட்டு அவுட்டானார். மேத்யூ வேடுக்கு மேக்ஸ்வெல் வீசிய பந்தை அவர் ஸ்வீப் ஷாட் ஆடமுயன்றார். அது பின்பக்க கால்காப்பில் பட்டதால் அம்பயர் அவுட்கொடுத்தார். பந்து கண்டிப்பாக கையுறையில் பட்டது என்பதால், உறுதியுடன் ரிவியூ செய்தார் வேட். ஆனால் அதை பரிசோதிக்கும்போது அவரது கையுறையை பந்து கடக்கும்போது அல்ட்ரா எட்ஜில் எந்தவிதமான ஸ்பைக்கும் காட்டவில்லை. ஆனால் பந்து கையுறையில் பட்டு திரும்பியது. ஆனால் டெக்னாலஜியின் பக்கம் அம்பயர்கள் நிற்பதே முறை என்பதால் அதற்கு அவுட் கொடுக்கப்பட்டது.

கடும் அதிருப்தியுடனும் ஆத்திரத்துடனும் களத்தை விட்டு வெளியேறிய மேத்யூ வேட், அதே ஆத்திரத்துடன் டிரெஸிங் ரூமுக்கு சென்றார். அங்கு ஹெல்மெட்டை கழட்டி எறிந்த மேத்யூ வேட், பேட்டை கடுங்கோபத்துடன் 2-3 முறை அடித்து தனது கோபத்தை தீர்த்துக்கொண்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios