டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியின் ஆலோசகராக ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் மேத்யூ ஹைடன் நியமிக்கப்பட்டுள்ளார்.  

டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய 2 அணிகளில் ஒன்றுதான் டி20 உலக கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளில் ஒன்றுதான் கோப்பையை வெல்லும் என்று ஆருடம் தெரிவித்துவருகின்றனர்.

இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளும் டி20 கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடிவருகின்றன. எனவே டி20 உலக கோப்பையை வெல்ல போட்டி மிகக்கடுமையாக இருக்கும். 

இதையும் படிங்க - விராட் கோலி சதம்.. புவனேஷ்வர் குமார் 5 விக்கெட்..! ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா ஆறுதல் வெற்றி

டி20 உலக கோப்பைக்கு முன் நடந்துவரும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் தோல்வியடைந்து ஃபைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து தொடரைவிட்டு வெளியேறியது. பாகிஸ்தான் - இலங்கை அணிகள் ஃபைனலுக்கு முன்னேறியுள்ளன.

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி வலுவான அணியாக திகழ்வதால் டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக பாகிஸ்தான் அணி பார்க்கப்படுகிறது. பாபர் அசாம், ரிஸ்வான், ஃபகர் ஜமான், இஃப்டிகார் அகமது, ஷதாப் கான், குஷ்தில் ஷா, ஆசிஃப் அலி என வலுவான பேட்டிங் ஆர்டர் மற்றும் ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ராஃப், நசீம் ஷா என மிரட்டலான பவுலிங் யூனிட்டையும் பெற்று நல்ல பேலன்ஸான அணியாக திகழும் பாகிஸ்தான் அணிக்கும் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலக கோப்பையை வெல்ல முக்கிய அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளது பாகிஸ்தான் அணி. ஆஸ்திரேலிய கண்டிஷனை நன்கறிந்தவரும், பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஏற்கனவே பணியாற்றியவருமான மேத்யூ ஹைடனை டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க - Asia Cup: அவரை எடுக்காததுதான் இந்திய அணியின் தோல்விக்கு காரணம்! ராகுல் டிராவிட், ரோஹித்தை விளாசிய ரவி சாஸ்திரி

கடந்த ஆண்டு அமீரகத்தில் நடந்த டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டார் ஆஸி., முன்னாள் ஜாம்பவான் மேத்யூ ஹைடன். இந்த ஆண்டு டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவனான மேத்யூ ஹைடனையே நியமித்துள்ளது பாகிஸ்தான் அணி.