நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில், அதிரடி பேட்ஸ்மேன் மட்டுமல்லாது மிகச்சிறந்த ஃபீல்டரும் கூட. நியூசிலாந்து அணிக்கு ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடிய பல அபாரமான மற்றும் அசாத்தியமான கேட்ச்களை பிடித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணி 244 ரன்கள் என்ற இலக்கை விரட்ட முடியாமல் 157 ரன்களுக்கே ஆல் அவுட்டாகி 86 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடியது. அப்போது லாக்கி ஃபெர்குசன் வீசிய 12வது ஓவரின் 2வது பந்தை ஸ்மித்தின் உடம்புக்கு நேராக 142 கிமீ வேகத்தில் வீசினார். அந்த பந்தை ஆஃப் ஸ்டம்புக்குள் வந்து ஃபைன் லெக் திசையில் அடித்தார் ஸ்மித். லெக் கல்லி திசையில் ஃபீல்டராக நின்ற மார்டின் கப்டில் அதிவேகமாக வந்த அந்த பந்தை அபாரமாக டைவ் அடித்து பிடித்தார். 

மிகவும் சிரமமான கேட்ச் அது. அந்த கேட்ச்சை பேட்ஸ்மேனுக்கு சற்று அருகில் நின்றுகொண்டு பிடிப்பது அவ்வளவு எளிதானது அல்ல. இந்த உலக கோப்பையின் அபாரமான கேட்ச்களில் இதுவும் ஒன்று. அந்த கேட்ச்சின் வீடியோ இதோ..