இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. கடைசி 3 போட்டிகளிலும் விராட் கோலி மற்றும் ஷமி ஆகிய இருவரும் ஆடாத நிலையில், அவர்கள் ஆடிய போட்டியிலேயே ஜெயிக்காத இந்திய அணிக்கு அவர்கள் ஆடாத இனிவரும் 3 போட்டிகளில் ஜெயிப்பது மிகக்கடினம்.

ஆனாலும் இந்திய அணி அடுத்தடுத்த போட்டிகளில் படுதோல்வியிலிருந்து மீண்டு செம கம்பேக் கொடுக்கும் முனைப்பில் உள்ளது. ஆனால் அதெல்லாம் நடக்கும் காரியமே இல்லை என்று ஆஸி., முன்னாள் வீரர் மார்க் வாக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள மார்க் வாக், இனிமேல் இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரில் தோல்வியிலிருந்து மீண்டு கம்பேக் கொடுத்து வெற்றி பாதைக்கு திரும்புவதெல்லாம் நடக்கும் காரியமே இல்லை. ஆஸ்திரேலியா இந்தியாவை 4-0 என ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றுவிடும் என்று மார்க் வாக் தெரிவித்துள்ளார்.