பிக்பேஷ் லீக் தொடரில் மார்கஸ் ஸ்டோய்னிஸின் தலையில் பலத்த அடி விழுந்தது. ஆனால் ஹெல்மெட்டில் பலமாக அடித்த பந்தினால், ஸ்டோய்னிஸுக்கு நல்ல வேளையாக ஆபத்தான வகையில் எதுவும் நடக்கவில்லை. 

பிக்பேஷ் லீக் தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடந்தது. மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது இந்த போட்டி. முதலில் 18 ஓவராகவும், பின்னர் 11 ஓவராகவும் குறைக்கப்பட்ட போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 11 ஓவரில் 69 ரன்கள் அடித்தது. 

டி.எல்.எஸ் முறைப்படி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி விரட்டும்போதே, இடையில் மீண்டும் மழை வந்தது. மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 7.3 ஓவரில் 55 ரன்கள் அடித்திருந்த நிலையில் மீண்டும் மழை வந்ததால் டி.எல்.எஸ் முறைப்படி 4 ரன்கள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் தொடக்க வீரராக இறங்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ், சிறப்பாக ஆடி 19 பந்தில் 25 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியின் ஃபாஸ்ட் பவுலர் மெரெடித் 4வது ஓவரின் 4வது பந்தை ஷார்ட் பிட்ச் பந்தாக வீசினார். அந்த பந்தின் பவுன்ஸை தவறாக கணித்தார் ஸ்டோய்னிஸ். அந்த பந்து நன்றாக மேலெழும்பும் என்று கணித்த ஸ்டோய்னிஸ், கீழே குனிந்தார். ஆனால் பந்து அவர் எதிர்பார்த்த அளவிற்கு எகிறாததால், ஸ்டோய்னிஸின் தலையில் அடித்தது. ஹெல்மெட்டில் பலமாக அடித்தது பந்து. உடனடியாக வீரர்கள் ஸ்டோய்னிஸிடம் சென்று நலம் விசாரித்தனர்.

அவருக்கு எந்தவித காயமோ வலியோ இல்லாததால் தொடர்ந்து பேட்டிங் ஆடினார். அந்த வீடியோ இதோ..