நடப்பு ரஞ்சி தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் முச்சதம் அடித்து அசத்திய மனோஜ் திவாரி, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 2 இன்னிங்ஸிலும் சிறப்பாக பேட்டிங் ஆடி அசத்தினார். 

பெங்கால் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பெங்கால் அணி முதலில் பேட்டிங் ஆடியது. பெங்கால் அணியில் மனோஜ் திவாரியை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. மற்றவர்கள் அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, மனோஜ் திவாரி மட்டும் நிலைத்து ஆடி அரைசதம் அடித்தார். மனோஜ் திவாரி 73 ரன்களை குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் ஒருமுனையில் நிலைத்து நிற்க, மறுமுனையில் மற்ற வீரர்கள் அனைவரும் ஆட்டமிழந்ததால் பெங்கால் அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 138 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய பஞ்சாப் அணி வெறும் 151 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. 13 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய பெங்கால் அணியில் இம்முறையும் மனோஜ் திவாரி தான் நன்றாக பேட்டிங் ஆடினார். மனோஜ் திவாரி மற்றும் அர்னாப் நந்தி ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். மற்றவர்கள் சொல்லும்படியாக ஆடவில்லை. 

Also Read - தாதா, இப்ப நீங்க பிசிசிஐ தலைவர்.. கொஞ்சமாவது ப்ரொஃபசனலா இருங்க.. யுவராஜின் கிண்டலான கோரிக்கை

திவாரி 65 ரன்களும் நந்தி 51 ரன்களும் அடித்தனர். 2வது இன்னிங்ஸில் பெங்கால் அணி 202 ரன்கள் அடித்தது. இதையடுத்து 190 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய பஞ்சாப் அணி, 141 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. இதையடுத்து பெங்கால் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Also Read - நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்.. ஓபனிங் பேட்ஸ்மேனாக சர்ப்ரைஸ் தேர்வு