ஆர்சிபி சோலிய முடிச்ச மாயங்க் யாதவ் – சொந்த மண்ணிலே மண்ணை கவ்விய பரிதாபம்!

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான 15ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Lucknow Super Giants Beat Royal Challengers Bengaluru by 28 Runs difference in 15th IPL 2024 Match at Chinnaswamy Stadium rsk

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 15ஆவது லீக் போட்டி தற்போது பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவித்தது.

இதில் குயீண்டன் டி காக் அதிகபட்சமாக 81 ரன்கள் எடுத்தார். நிக்கோலஸ் பூரன் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்னர், 182 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆர்சிபி விளையாடியது. இதில் விராட் கோலி 22 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் பாப் டூப்ளெசிஸ் 19 ரன்களில் ரன் அவுட்டானார். அடுத்து வந்த கிளென் மேக்ஸ்வெல் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

சிறந்த ஆல்ரவுண்டர் என்று அணியில் வாங்கப்பட்ட கேமரூன் க்ரீன் 9 ரன்களில் நடையை கட்டினார். ஒரு கட்டத்தில் ஆர்சிபி 7.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 58 ரன்கள் எடுத்திருந்தது. விக்கெட் கீப்பர் அனுஜ் ராவத் 11 ரன்னிலும், ரஜத் படிதார் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அவ்வளவு தான் ஆர்சிபி என்று எண்ணிக் கொண்டிருந்த போது மஹிபால் லோம்ரார் வந்து 3 பவுண்டரி, 3 சிக்ஸர் விளாசவே ஆட்டம் சூடு பிடித்தது. எனினும், அவர் 33 ரன்களில் ஆட்டமிழக்க மெல்ல மெல்ல லக்னோவின் பக்கம் வெற்றி திரும்பியது.

தினேஷ் கார்த்திக்கும் 4 ரன்களில் நடையை கட்டினார். கடைசியில் வந்த முகமது சிராஜ் அடுத்தடுத்து 2 சிக்ஸர் விளாசி ஆர்சிபி ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தார். இறுதியாக ஆர்சிபி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக ஆர்சிபி விளையாடிய 4 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடம் பிடித்துள்ளது. இந்த போட்டி உள்பட 2 போட்டியில் சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்துள்ளது.

பவுலிங்கைப் பொறுத்த வரையில் லக்னோ அணியில் மாயங்க் யாதவ் 3 விக்கெட்டும், நவீன் உல் ஹாக் 2 விக்கெட்டும், மணிமாறன் சித்தார்த், யாஷ் தாக்கூர், மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios