Asianet News TamilAsianet News Tamil

LSG vs KKR: டாஸ் ரிப்போர்ட்.. லக்னோ அணியில் 3 அதிரடி மாற்றங்கள்..! கேகேஆர் அணியில் ஒரு மாற்றம்

கேகேஆருக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
 

lsg win toss opt to bat against kkr in important match of ipl 2022
Author
Mumbai, First Published May 18, 2022, 7:18 PM IST

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டி முக்கியமான போட்டி. பிளே ஆஃப் வாய்ப்பை தீர்மானிக்கும் போட்டி.இந்த போட்டியில் வெற்றி பெற்றால் லக்னோ அணி பிளே ஆஃபிற்கு முன்னேறிவிடும். தோற்றாலும் பிளே ஆஃபிற்கான வாய்ப்பு லக்னோ அணிக்கு உள்ளது. ஆனால் கேகேஆர் அணி இந்த கடைசி போட்டியில் வெற்றி பெற்றாலும், மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்தே அந்த அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு உள்ளது.

மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

லக்னோ அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. க்ருணல் பாண்டியா, துஷ்மந்தா சமீரா, ஆயுஷ் பதோனி ஆகிய மூவரும் நீக்கப்பட்டு மனன் வோரா, எவின் லூயிஸ் மற்றும் கிருஷ்ணப்பா கௌதம் ஆகிய மூவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), எவின் லூயிஸ், தீபக் ஹூடா, மனன் வோரா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஜேசன் ஹோல்டர், கிருஷ்ணப்பா கௌதம், மோசின் கான், ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய்.

கேகேஆர் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அஜிங்க்யா ரஹானே நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அபிஜித் டோமர் சேர்க்கப்பட்டுள்ளார்.

கேகேஆர் அணி:

வெங்கடேஷ் ஐயர், அபிஜித் டோமர், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், உமேஷ் யாதவ், டிம் சௌதி, வருண் சக்கரவர்த்தி.
 

Follow Us:
Download App:
  • android
  • ios