Asianet News TamilAsianet News Tamil

LSG vs KKR: கேகேஆருக்கு எதிராக வெற்றி பெற்று பிளே ஆஃபிற்கு முன்னேறியது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்

கேகேஆருக்கு எதிரான போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, 2வது அணியாக பிளே ஆஃபிற்கு முன்னேறியது.

lsg beat kkr and qualify for play offs in ipl 2022
Author
Mumbai, First Published May 18, 2022, 11:26 PM IST

ஐபிஎல் 15வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில், மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்த முக்கியமான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸும் கேகேஆரும் மோதின. டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), எவின் லூயிஸ், தீபக் ஹூடா, மனன் வோரா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஜேசன் ஹோல்டர், கிருஷ்ணப்பா கௌதம், மோசின் கான், ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய்.

கேகேஆர் அணி:

வெங்கடேஷ் ஐயர், அபிஜித் டோமர், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், உமேஷ் யாதவ், டிம் சௌதி, வருண் சக்கரவர்த்தி.

முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் குயிண்டன் டி காக் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடினர். தொடக்கம் முதலே அடித்து ஆடிய இருவரும் அரைசதம் அடித்தனர். விக்கெட்டே விட்டுக்கொடுக்காமல், அதேவேளையில் இருவரும் அடித்தும் ஆடினர்.

15 ஓவருக்கு மேல் ருத்ரதாண்டவம் ஆடினார் டி காக். 16வது ஓவரிலிருந்து சிக்ஸர் மழை பொழிந்தார் டி காக். 59 பந்தில் சதமடித்த டி காக், 19வது ஓவரில் 3 சிக்ஸர்களும், கடைசி ஓவரில் 4 பவுண்டரிகளும் விளாசினார். ராகுல் 51 பந்தில் 68 ரன்களும், டி காக் 70 பந்தில் 140 ரன்களும் குவிக்க, 20 ஓவரில் 210 ரன்களை குவித்த லக்னோ அணி, 211 ரன்கள் என்ற கடின இலக்கை கேகேஆருக்கு நிர்ணயித்துள்ளது. ஐபிஎல்லில் ஒரு தொடக்க ஜோடி விக்கெட்டே இழக்காமல் இன்னிங்ஸை முடிப்பது இதுவே முதல் முறை.

211 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய கேகேஆர் அணி 208 ரன்கள் அடிக்க,2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லக்னோ அணி பிளே ஆஃபிற்கு முன்னேறியது.

Follow Us:
Download App:
  • android
  • ios