Asianet News TamilAsianet News Tamil

IPL Captains List: கேப்டன்களின் அறிமுகம் – தொடரிலிருந்து வெளியேறிய வீரர்கள் யார் யார்?

ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் வரும் 22 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் ஒவ்வொரு அணியிலும் கேப்டன்களின் அறிமுகம் மற்றும் எந்தெந்த வீரர்கள் மாற்றப்பட்டுள்ளனர் என்று பார்க்கலாம் வாங்க…

List of IPL 2024 Captains and Ruled out players list; check details here rsk
Author
First Published Mar 15, 2024, 2:27 PM IST

ஐபிஎல் 2024 தொடருக்கான 17ஆவது சீசன் வரும் 22 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உள்ளிட்ட சில அணிகளில் கேப்டன்கள் மாற்றப்பட்டுள்ளனர். மேலும், ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களில் சிலர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யார் என்று பார்க்கலாம் வாங்க…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்.எஸ். தோனி கேப்டனாகவே  களமிறங்குகிறார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸூம், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக சுப்மன் கில்லும் களமிறங்குகின்றனர். டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் திரும்ப வந்திருக்கிறார். இதே போன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயரும் திரும்ப வந்திருக்கிறார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக பாப் டூப்ளெசிஸ் செயல்படுகிறார். ஒரு முறை கூட டிராபியை கைப்பற்றாத சிஎஸ்கே அணியானது இந்த முறை டிராபியை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சனும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேபட்னாக ஷிகர் தவானும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் செயல்பட இருக்கின்றனர்.

ஐபிஎல் 2024 தொடரிலிருந்து வெளியேறிய வீரர்களின் பட்டியலில் முகமது ஷமி (குஜராத் டைட்டன்ஸ்), பிரஷித் கிருஷ்ணா (ராஜஸ்தான் ராயல்ஸ்), டெவோன் கான்வே (சென்னை சூப்பர் கிங்ஸ்), ஜேசன் ராய் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), கஸ் அட்கின்ஸன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), மார்க் வுட் (லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்), ஹாரி ப்ரூக் (டெல்லி கேபிடல்ஸ்), லுங்கி நிகிடி (டெல்லி கேபிடல்ஸ்) ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios