ஃபாலோ ஆன் பெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக 384 ரன்களை நிர்ணயித்தது இந்திய அணி. ஆனால் 212 ரன்கள் மட்டுமே ஆஸ்திரேலிய அணியால் எடுக்க முடிந்ததால் இந்திய அணி 171 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

ஸ்டீவ் வாக் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, 2001ம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் மும்பையில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதையடுத்து கொல்கத்தாவில் நடந்த இரண்டாவது போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 445 ரன்களை குவித்தது. ஆனால் இந்திய அணி வெறும் 171 ரன்கள் மட்டுமே எடுத்து ஃபாலோ ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ராகுல் டிராவிட் மற்றும் லட்சுமணன் இணைந்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்து இமாலய ஸ்கோரை எட்ட உதவினர். அபாரமாக ஆடிய லட்சுமணன் 281 ரன்களையும் ராகுல் டிராவிட் 180 ரன்களையும் குவித்தனர். இவர்களின் அபாரமான பேட்டிங்கால் இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 657 ரன்களை குவித்து இந்திய அணி டிக்ளேர் செய்தது. 

ஃபாலோ ஆன் பெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக 384 ரன்களை நிர்ணயித்தது இந்திய அணி. ஆனால் 212 ரன்கள் மட்டுமே ஆஸ்திரேலிய அணியால் எடுக்க முடிந்ததால் இந்திய அணி 171 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து சென்னையில் நடந்த மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றியது. 

ஃபாலோ ஆன் பெற்ற போட்டியில் அபார வெற்றி பெறவைத்த லட்சுமணனின் இன்னிங்ஸ் காலத்தால் அழியாதது. அந்த இன்னிங்ஸ் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மிக முக்கியமானது. லட்சுமணன் - டிராவிட்டின் அந்த பார்ட்னர்ஷிப் தான் இன்றுவரை இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த பார்ட்னர்ஷிப்பாக பார்க்கப்படுகிறது. 

லட்சுமணனின் அந்த இன்னிங்ஸை கங்குலி, டிராவிட் ஆகியோர் ஏற்கனவே வெகுவாக பாராட்டியதோடு லட்சுமணனை புகழ்ந்தும் தள்ளியுள்ளனர். அந்த இன்னிங்ஸ் ஆடி நேற்றுடன்(மார்ச் 14) 18 ஆண்டுகள் நிறைவடைந்தது. 

Scroll to load tweet…

இந்திய அணியின் வரலாற்று சிறப்புமிக்க அந்த வெற்றியின் 18வது ஆண்டு தினத்தை நினைவுகூர்ந்து லட்சுமணன் டுவீட் செய்துள்ளார். அந்த டுவீட்டிற்கு பதிலளித்துள்ள அப்போதைய இந்திய அணியின் கேப்டன் கங்குலி, தான் ஆடியதிலேயே மிகச்சிறந்த டெஸ்ட் போட்டி அதுதான் என்று டுவீட் செய்துள்ளார்.

Scroll to load tweet…