Asianet News TamilAsianet News Tamil

ஆர்ச்சரிடம் வாங்கிய அடி.. மனம் திறந்த ஆஸ்திரேலிய வீரர்.. ரொம்ப தெளிவான ஆளுதான்யா நீ

ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஸ்மித்துக்கு பதிலாக மாற்று பேட்ஸ்மேனாக களமிறங்கிய லபுஷேனுக்கு முதல் பந்தையே பவுன்ஸராக வீசி சாய்த்தார் ஆர்ச்சர்.

labuschagne speaks about archers bouncer to him
Author
England, First Published Aug 20, 2019, 11:24 AM IST

ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டி டிராவில் முடிந்தது. லண்டன் லார்ட்ஸில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 258 ரன்களையும் ஆஸ்திரேலிய அணி 250 ரன்களையும் அடித்தன. 

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, பென் ஸ்டோக்ஸின் அபாரமான சதத்தால், 5 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. 48 ஓவரில் 267 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 47.3 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் அடித்தது. இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது. 

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆர்ச்சர் 148 கிமீ வேகத்தில் வீசிய பவுன்ஸரில், ஸ்மித்துக்கு பின் கழுத்தில் அடிபட்டது. அதனால் அவரால் இரண்டாவது இன்னிங்ஸில் ஆடமுடியவில்லை. எனவே இரண்டாவது இன்னிங்ஸில் அவருக்கு பதிலாக லபுஷேன் பேட்டிங் ஆடினார். 

labuschagne speaks about archers bouncer to him

இந்த போட்டியில் ஸ்மித் மற்றும் அவருக்கு பதிலாக சப்ஸ்டிடியூட் பேட்ஸ்மேனாக களமிறங்கிய லபுஷேன் ஆகிய இருவருக்கு அதிவேக பவுன்ஸரை போட்டு சாய்த்தார் ஆர்ச்சர். முதல் இன்னிங்ஸில் ஆர்ச்சர் 148 கிமீ வேகத்தில் வீசிய பவுன்ஸர், ஸ்மித்தின் பின் கழுத்து பகுதியில் அடித்ததால் அவர் சுருண்டு கிழே விழுந்தார். அதனால் அவர் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் ஆடவில்லை. 

கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக சப்ஸ்டிடியூட் பேட்ஸ்மேனாக லபுஷேன் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கினார். அவர் களத்திற்கு வந்த முதல் பந்தையே பவுன்ஸராக வீசி ஹெல்மெட்டில் அடித்து அவரையும் சாய்த்தார் ஆர்ச்சர். லபுஷேனின் முகத்திற்கு நேராக ஹெல்மெட்டில் அடித்தது அந்த பந்து. கீழே விழுந்த லபுஷேன், தொடர்ச்சியாக பேட்டிங் ஆடினார். முக்கியமான இன்னிங்ஸில் நெருக்கடியான சூழலில் அபாரமாக பேட்டிங் ஆடி 59 ரன்களை அடித்து ஆஸ்திரேலிய அணி தோல்வியை தவிர்க்க உதவினார். 

labuschagne speaks about archers bouncer to him

லார்ட்ஸ் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், ஆர்ச்சர் வீசிய பவுன்ஸர் குறித்தும் அப்போதைய தனது மனநிலை குறித்தும் மனம் திறந்துள்ளார் லபுஷேன். அதுகுறித்து பேசிய லபுஷேன், நான் ஜீரோ நாட் அவுட்.. அது ஒரு வேகமான பவுன்ஸர் அவ்வளவுதான் என்ற மனநிலையில்தான் நான் இருந்தேன். பந்து ஹெல்மெட்டின் கிரில்லில்தான் பட்டது. எனவே நான் களத்திலிருந்து வெளியேற விரும்பவில்லை. லார்ட்ஸில் ஆடுவது மிகப்பெரிய அனுபவம். அதனால் அதை இழக்க நான் விரும்பவும் இல்லை, தயாராகவும் இல்லை. 

அதன்பின்னர் ஒவ்வொரு பந்தையும் மிக மிக கவனமுடன் பார்க்க வேண்டும் என்ற விஷயத்திற்கு அந்த பவுன்ஸர் என்னை பழக்கியது. பந்து ஹெல்மெட் கிரில்லில்தானே பட்டது. அதனால் பிரச்னையில்லை.. டென்ஷன் ஆகாமல் கூலாக ஆடவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். ஆர்ச்சர் வீசியது மாதிரியான பந்துகளில் ரன் அடிக்கும் விதங்களை பழக வேண்டும் அல்லது ஒதுங்குவதற்கு தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று லபுஷேன் தெரிவித்தார்.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios