Asianet News TamilAsianet News Tamil

IND vs NZ இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து வில்லியம்சனை தொடர்ந்து விலகிய முக்கியமான வீரர்

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனை தொடர்ந்து நியூசிலாந்து அணியின் மற்றொரு முக்கியமான வீரரும் விலகியுள்ளார்.
 

kyle jamieson pulls out of t20 series against india after kane williamson
Author
Jaipur, First Published Nov 17, 2021, 4:38 PM IST

டி20 உலக கோப்பை ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று, முதல் முறையாக டி20 உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்த நியூசிலாந்து அணி, அந்த தொடரை முடித்த கையோடு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நேரடியாக இந்தியாவிற்கு வந்துவிட்டது.

இந்தியா - நியூசிலாந்து இடையே 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. இன்று(17), 19 மற்றும் 21 ஆகிய 3 நாட்கள் டி20 போட்டிகளும், அதைத்தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகளும் நடக்கின்றன.

நவம்பர் 25-29ல் கான்பூரில் முதல் டெஸ்ட் போட்டியும், டிசம்பர் 3-7ல் மும்பை வான்கடேவில் 2வது டெஸ்ட் போட்டியும் நடக்கவுள்ளன. இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது. எனவே இந்த தொடரில் வெற்றி பெறுவது அவசியம்.

அந்தவகையில், டெஸ்ட் தொடருக்கு தயாராகும் விதமாக டி20 தொடரிலிருந்து விலகினார் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன். அதனால் டிம் சௌதி டி20 தொடரில் நியூசிலாந்து அணிக்கு கேப்டன்சி செய்கிறார்.

இந்நிலையில், நியூசிலாந்தின் ஃபாஸ்ட் பவுலரான கைல் ஜாமிசனும் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். நியூசிலாந்து டெஸ்ட் அணியின் முன்னணி ஃபாஸ்ட் பவுலராக திகழும் நிலையில், டெஸ்ட் தொடருக்கு தயாராகும் விதமாக கைல் ஜாமிசனும் டி20 தொடரிலிருந்து விலகியிருக்கிறார்.

டிரெண்ட் போல்ட், டிம் சௌதி, லாக்கி ஃபெர்குசன் ஆகிய ஃபாஸ்ட் பவுலர்கள் நியூசிலாந்து அணியில் இருப்பதால் கைல் ஜாமிசன் விலகியது, நியூசிலாந்து அணிக்கு பெரிய பாதிப்பாக இருக்காது.

நியூசிலாந்து டி20 அணி:

மார்டின் கப்டில், டேரைல் மிட்செல், க்ளென் ஃபிலிப்ஸ், மார்க் சாப்மேன், ஜேம்ஸ் நீஷம், டிம் சேஃபெர்ட் (விக்கெட் கீப்பர்), லாக்கி ஃபெர்குசன், டிரெண்ட் போல்ட், இஷ் சோதி, டாட் ஆஸ்டில், ஆடம் மில்னே.

Follow Us:
Download App:
  • android
  • ios