Asianet News TamilAsianet News Tamil

அவங்கள ரொம்ப அசால்ட்டா நினைச்சுடாதீங்க தெறிக்கவிட போறாங்க.. இந்தியா உட்பட பெரிய பெரிய அணிகளை எல்லாம் எச்சரிக்கும் கும்ப்ளே

உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்குகிறது. இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து தான் வெல்லும் என பல முன்னாள் ஜாம்பவான்கள் கணித்துள்ளனர். 
 

kumble opinion about afghanistan team in world cup 2019
Author
India, First Published May 20, 2019, 5:07 PM IST

உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்குகிறது. இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து தான் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் ஆக்ரோஷமாக ஆடி ஒருநாள் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. இந்த அணிகளில் ஒன்றுதான் உலக கோப்பையை வெல்லும் என பல முன்னாள் ஜாம்பவான்கள் கணித்துள்ளனர். ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகளும் வலுவாக உள்ளன. 

ஆஃப்கானிஸ்தான் அணி கலந்துகொள்ளும் இரண்டாவது உலக கோப்பைதான் இது. உலக கோப்பைக்கு அந்த அணி கத்துக்குட்டியாக இருந்தாலும் சமீபகாலமாக அந்த அணி ஆடிவரும் ஆட்டம் அபாரமானது. ஆசிய கோப்பை தொடரில் கூட இந்திய அணியை வெற்றி பெறவிடாமல் கடைசி பந்தில் கட்டுப்படுத்தி போட்டியை டிரா செய்தது. எனவே ஆஃப்கானிஸ்தான் அணியை குறைத்து மதிப்பிட முடியாது. ஆஃப்கானிஸ்தான் அணியும் செம டஃப் கொடுக்கும். 

kumble opinion about afghanistan team in world cup 2019

உலக கோப்பை நெருங்கிய நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளின் மீதே கவனக்குவிப்பு உள்ளது. ஆனால் ஆஃப்கானிஸ்தான் அணி இந்த உலக கோப்பையில் பல பெரிய அணிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழும் என கும்ப்ளே எச்சரித்துள்ளார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கும்ப்ளே, ஆஃப்கானிஸ்தான் அணிதான் ஆசிய கோப்பையில் ஆடியதில் இரண்டாவது சிறந்த அணி. இந்தியாவுக்கு எதிரான போட்டியை டிரா செய்து பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணியை பதறடித்தது. ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் உலகம் முழுவதிலும் பல்வேறு டி20 லீக் போட்டிகளில் ஆடுகின்றனர். ரஷீத் கான், முகமது நபி, முஜீபுர் ரஹ்மான் என சிறந்த வீரர்களை கொண்டுள்ளது ஆஃப்கான் அணி. அந்த அணியின் தொடக்க வீரர் ஷேஷாத் அபாயகரமான வீரர். அவர் எதிரணிக்கு நெருக்கடியை அதிகரிக்கக்கூடிய வீரர். இந்த உலக கோப்பையில் பல பெரிய அணிகளை ஆஃப்கானிஸ்தான் அணி அச்சுறுத்தும் என கும்ப்ளே எச்சரித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios