Asianet News TamilAsianet News Tamil

#IPL2021 அந்த பையனை டீம்ல பெற்றது ரொம்ப மகிழ்ச்சி.. லெஜண்ட் சங்கக்கராவே புகழும் இளம் வீரர்

இளம் இடது கை ஃபாஸ்ட் பவுலர் சேத்தன் சகாரியாவை அணியில் பெற்றிருப்பது மகிழ்ச்சி என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கிரிக்கெட்டுக்கான இயக்குநரும் முன்னாள் லெஜண்ட் கிரிக்கெட்டருமான சங்கக்கரா தெரிவித்துள்ளார்.
 

kumar sangakkara speaks about young fast bowler chetan sakariya
Author
Chennai, First Published May 13, 2021, 9:29 PM IST

ஐபிஎல்லில் ஒவ்வொரு சீசனிலும் பவுலர்களை விட புதுப்புது பேட்ஸ்மேன்கள் தான் பெரிதாக உருவெடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, இந்திய அணியிலும் இடம்பிடிப்பார்கள். டி20 போட்டிகளே பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானதுதான். அதிலும் ஐபிஎல் முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களுக்கானதாகவே திகழ்கிறது.

ஆனால் இந்த சீசனில் பேட்ஸ்மேன்களை விட பவுலர்கள் கவனம் ஈர்த்தனர். அதிலும் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிராத ஆவேஷ் கான், சேத்தன் சகாரியா, ஹர்ஷல் படேல் ஆகிய உள்நாட்டு பவுலர்கள் அருமையாக வீசி அதிக கவனம் ஈர்த்தனர். பும்ரா, போல்ட், ரபாடா ஆகிய சர்வதேச அளவிலான டாப் பவுலர்கள் ஐபிஎல்லில் ஆடியபோதிலும், அவர்களைவிட ஆவேஷ் கானும் ஹர்ஷல் படேலும் சகாரியாவுமே அபாரமாக செயல்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ.1.2 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இடது கை ஃபாஸ்ட் பவுலரான சேத்தன் சகாரியா, 14வது சீசனில்(நடந்தவரை) 7 போட்டிகளில் ஆடி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வீழ்த்திய விக்கெட்டுகள் என்னவோ குறைவுதான் என்றாலும், பெரிய பெரிய வீரர்களை வீழ்த்தினார் சகாரியா. கேஎல் ராகுல், தோனி ஆகிய பெரிய வீரர்களை வீழ்த்தினார்.

kumar sangakkara speaks about young fast bowler chetan sakariya

14வது சீசனின் சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒருவரான சகாரியாவின் சகோதரர் தற்கொலை செய்து உயிரிழந்த நிலையில், அவரது தந்தை அண்மையில் கொரோனாவிற்கு பலியானார். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலமான சகாரியாவை அடுத்தடுத்த சோகங்கள் சூழ்ந்தன.

இந்நிலையில், சகாரியா ஆடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கிரிக்கெட்டுக்கான இயக்குநரும் முன்னாள் லெஜண்ட் கிரிக்கெட்டருமான சங்கக்கரா, சகாரியா குறித்து பேசியுள்ளார். சகாரியா குறித்து பேசிய சங்கக்கரா, சகாரியாவிற்கு இந்த ஆண்டு ஜனவரியிலிருந்தே மிகக்கடினமாக காலமாக இருந்துள்ளது. எங்களுடைய அன்பும் பிரார்த்தனையும் அவருக்காக எப்போதுமே உண்டு. அவரது அணுகுமுறை மற்றும் அழுத்தத்தை உண்டுபண்ணும் திறன் அபாரம். அவரை எங்கள் அணியில் பெற்றது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது என்று சங்கக்கரா தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios