Asianet News TamilAsianet News Tamil

தல இல்லைனா அந்த தம்பிலாம் ஒரு ஆளே இல்ல!! ஓர் அலசல்

கிரிக்கெட்டில் பேட்டிங், பவுலிங் ஆகியவற்றில் தலைசிறந்து விளங்கியவர்கள், விளங்குபவர்கள் பலர். ஆனால் தனித்தனி துறைகளை கடந்து ஒட்டுமொத்தமாக ஒரு தலைசிறந்த, அறிவுக்கூர்மையான முழு கிரிக்கெட்டராக திகழ்பவர் தோனி.

kuldeep yadav is nothing without ms dhoni
Author
India, First Published Mar 15, 2019, 10:30 AM IST

கிரிக்கெட்டில் பேட்டிங், பவுலிங் ஆகியவற்றில் தலைசிறந்து விளங்கியவர்கள், விளங்குபவர்கள் பலர். ஆனால் தனித்தனி துறைகளை கடந்து ஒட்டுமொத்தமாக ஒரு தலைசிறந்த, அறிவுக்கூர்மையான முழு கிரிக்கெட்டராக திகழ்பவர் தோனி. அவர் கேப்டன்சியிலிருந்து விலகினாலும் அவரது ஆலோசனைகள் நல்ல பலனை கொடுப்பதோடு, பல தருணங்களில் திருப்புமுனைகளாக அமைந்துவிடும். 

kuldeep yadav is nothing without ms dhoni

அதிவேக ஸ்டம்பிங், சமயோசித ரன் அவுட்டுகள், அபாரமான கேட்ச்கள் என விக்கெட் கீப்பிங்கில் மிரட்டுபவர் தோனி. அத்துடன் இல்லாமல், எதிரணி வீரர்களின் பேட்டிங் உத்திகளை அறிந்து, அவர்களின் பிளஸ், மைனஸ்களை தெரிந்துகொண்டு அதற்கேற்றபடி பவுலர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதோடு ஃபீல்டிங் செட்டப்பில் கேப்டனுக்கும் ஆலோசனைகளை வழங்குவார். அவர் வழங்கும் ஆலோசனைகள் அபாரமானவை. 

kuldeep yadav is nothing without ms dhoni

தோனியின் இந்த ஆலோசனைகளின் மூலம் அதிகம் பயனடைந்தவர்கள் என்றால் அது குல்தீப்பும் சாஹலும்தான். ஸ்பின் பவுலர்களான அவர்களுக்கு அவ்வப்போது ஐடியா கொடுத்துக்கொண்டே இருப்பார் தோனி. எந்த திட்டமும் இல்லாமல் அவர்கள் நிராயுதபாணியாக இருக்கும்போது, அவர்களின் ஒரே நம்பிக்கை தோனி தான். 

இப்படி, தோனி கொடுக்கும் ஆலோசனைகளை பின்பற்றி அவர்கள் விக்கெட்டுகளை பலமுறை வீழ்த்தியிருக்கிறார்கள். நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தோனி தான் ஒரு ஜீனியஸ் என்பதை மீண்டும் நிரூபித்தார். கடைசி விக்கெட்டாக களமிறங்கிய டிரெண்ட் போல்ட்டுக்கு எப்படி பந்துவீச வேண்டுமென்று தோனி ஒரு ஆலோசனையை வழங்கினார். அதேபோல குல்தீப் சரியாக வீச, போல்ட் ஆட்டமிழந்தார். தோனி ஆலோசனை வழங்கிய அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 

kuldeep yadav is nothing without ms dhoni

குல்தீப் மற்றும் சாஹலுக்கு அப்பாற்பட்டு பார்ட் டைம் ஸ்பின்னரான கேதர் ஜாதவிற்கும் எந்த பேட்ஸ்மேனுக்கு எப்படி பந்துவீச வேண்டும் என தோனி தொடர்ந்து வழிகாட்டிவருகிறார். கேதர் ஜாதவும் அவ்வப்போது முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு முக்கியமான திருப்புமுனைகளை அமைத்து கொடுக்கிறார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் ரோஸ் டெய்லரின் விக்கெட்டை கேதர் ஜாதவ் வீழ்த்தினார். அந்த விக்கெட்டின் முழு கிரெடிட்டும் தோனியையே சாரும். மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து டெய்லரை வெளியேற்றினார் தோனி. மேலும் கேதருக்கு எப்படி பந்துவீச வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கியதோடு ஃபீல்டிங் செட் செய்ய அவர் வழங்கிய ஆலோசனை வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.  

kuldeep yadav is nothing without ms dhoni

இவ்வாறு குல்தீப், சாஹல், ஜடேஜா, கேதர் ஜாதவ் என எந்த ஸ்பின்னராக இருந்தாலும் அவர்களுக்கு எப்படி பந்துவீச வேண்டும் என்ற ஆலோசனை தோனியிடமிருந்து அவ்வப்போது வந்துகொண்டே இருக்கும். அது அவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். அவர்களாக எந்த திட்டமும் தீட்ட தேவையில்லை. தோனி சொல்வதை செய்தாலே போதும் என்கிற அளவுக்கு இருக்கும். 

kuldeep yadav is nothing without ms dhoni

இதை குல்தீப், கேதர் ஆகியோர் பலமுறை தெரிவித்துள்ளனர். தோனியின் ஆலோசனைகளில் மிகவும் பயனடைந்தவர் என்றால் அது குல்தீப் யாதவ் தான். தோனியின் வழிகாட்டுதலின் படி பந்துவீசி விக்கெட்டுகளை வாரி குவித்துள்ளார். தோனி ஆடும் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசியுள்ள குல்தீப் யாதவ், தோனி இல்லாத போட்டிகளில் படுமோசமாக சொதப்பியுள்ளார். 

இதுவரை 44 ஒருநாள் போட்டிகளில் குல்தீப் யாதவ் ஆடியுள்ளார். இந்த 44 போட்டிகளில் 40ல் தோனி ஆடியுள்ளார். தோனி ஆடிய அந்த 40 போட்டிகளில் 87 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்  குல்தீப். அந்த 40 போட்டிகளிலும் அவரது பந்துவீச்சில் ரன்களும் கட்டுக்கோப்பாகவே உள்ளன. 

kuldeep yadav is nothing without ms dhoni

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த தொடரில் கடைசி இரண்டு போட்டிகளில் தோனி ஆடவில்லை. அந்த இரண்டு போட்டிகளிலும் மொத்தமாக 20 ஓவர்களை வீசி 138 ரன்களை விட்டுக்கொடுத்த குல்தீப், வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். குல்தீப் யாதவின் இதுவரையிலான ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் இந்த ஆஸ்திரேலிய தொடர்தான் மோசமான தொடர். 5 போட்டிகளில் 50 ஓவர்கள் வீசி 302 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். அதில் 138 ரன்கள், தோனி ஆடாத கடைசி இரண்டு போட்டிகளில் கொடுக்கப்பட்டது. தோனி ஆடிய முதல் 3 போட்டிகளில் 30 ஓவர்கள் வீசி 164 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

kuldeep yadav is nothing without ms dhoni

தோனி ஆடாத போட்டிகளில், எதிரணி பேட்ஸ்மேன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடும் போது, என்ன செய்வதென்று தெரியாமல் நிராயுதபாணியாகிறார் குல்தீப். தோனி இல்லையென்றால், குல்தீப் யாதவின் பவுலிங் இந்திய அணிக்கு எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios