கேகேஆர் டாஸ் வென்று பேட்டிங் – டெல்லிக்கு 2ஆவது வெற்றி கிடைக்குமா?

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான 16ஆவது லீக் போட்டியில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

Kolkata Knight Riders won the toss and opted to bat first against Delhi Capitals in 16th IPL Match at Visakhapatnam rsk

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் இன்று நடக்கும் 16ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. விசாகப்பட்டினம் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். கேகேஆர் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அங்க்ரிஸ் ரகுவன்ஷி சேர்க்கப்பட்டுள்ளார். இதே போன்று டெல்லி அணியிலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி முகேஷ் குமார் காயம் அடைந்த நிலையில் அவருக்கு பதிலாக சுமித் குமார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிங்கு சிங், அங்க்ரிஸ் ரகுவன்ஷி, ஆண்ட்ரே ரஸல், ராமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.

டெல்லி கேபிடல்ஸ்:

பிரித்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), டிரிஸ்ட்ன் ஸ்டப்ஸ், அக்‌ஷர் படேல், சுமித் குமார், ரசிக் தர் சலாம், ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, இஷாந்த் சர்மா, கலீல் அகமது.

இந்த சீசனில் இதுவரையில் டெல்லி கேபிடல்ஸ் விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் அதுவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் தான் இரு அணிகளும் இதற்கு முன்னதாக 32 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 16 போட்டியிலும், டெல்லி கேபிடல்ஸ் 15 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை.

விசாகப்பட்டினம் மைதானத்தில் இதுவரையில் 14 போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. இதில், 7 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றிருக்கிறது. இதே போன்று 2ஆவது பேட்டிங் செய்த அணியும் 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இங்கு டெல்லி விளையாடிய 5 போட்டிகளில் 3ல் வெற்றி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா பேட்டிங் மற்றும் பவுலிங்கில் பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. பேட்டிங்கில் பிலிப் சால்ட், வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர், ஆண்ட்ரே ரஸல், சுனில் நரைன், ரிங்கு சிங் ஆகியோர் இருக்கின்றனர். இதே போன்று பவுலிங்கில் சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி, ஆண்ட்ரே ரஸல், ஹர்ஷித் ராணா ஆகியோர் இருக்கின்றனர்.

மேலும், டெல்லி கேபிடல்ஸ் அணியில் பிரித்வி ஷா, டேவிட் வார்னர், ரிஷப் பண்ட், மிட்செல் மார்ஷ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அபிஷேக் போரெல் ஆகியோர் இருக்கின்றனர். பவுலிங்கில் இஷாந்த் சர்மா, முகேஷ் குமார், கலீல் அகமது, ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, அக்‌ஷர் படேல் ஆகியோர் பலம் வாய்ந்த பிளேயர்ஸாக கருதப்படுகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios