நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி படுமோசமாக ஆடியுள்ளார். முதல் டெஸ்ட்டில் 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்தே வெறும் 21 ரன்கலும் இரண்டாவது டெஸ்ட்டில் மொத்தமாகவே வெறும் 17 ரன்களும் மட்டுமே அடித்தார். 

2வது டெஸ்ட்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே எல்பிடபிள்யூ ஆனார். முதல் இன்னிங்ஸில் டிம் சௌதியின் பவுலிங்கிலும், இரண்டாவது இன்னிங்ஸில் காலின் டி கிராண்ட் ஹோமின் பவுலிங்கிலும் ஆட்டமிழந்தார். 

முதல் இன்னிங்ஸில் தெளிவாக அவுட் என்று தெரிந்ததற்கு ரிவியூ எடுத்தார் கோலி. சௌதி வீசிய பந்து, கோலியின் கால்காப்பில் பட்டது. அது அவுட் என்பது தெளிவாக தெரிந்தது. கோலி புஜாராவிடம் கேட்டார். புஜாராவும் அது அவுட் என்றுதான் சொன்னார். ஆனாலும் கோலி ரிவியூ எடுத்தார். ரிவியூவிலும் அது அவுட் என்பது உறுதியானது. இரண்டாவது இன்னிங்ஸில் காலின் டி கிராண்ட் ஹோமின் பந்தில் அவுட்டானபோது, கோலி ரிவியூ எடுக்கவில்லை. அமைதியாக சென்றுவிட்டார். 

Also Read - நியூசிலாந்தில் படுமோசமா அசிங்கப்பட்ட கோலி.. முன்னாள் ஜாம்பவான் சொன்ன அதிரடி காரணம்

கோலி இதுவரை தனக்கு எல்பிடபிள்யூ கொடுக்கப்பட்ட 14 முறையும் ரிவியூ எடுத்துள்ளார். அதில் 9 முறை ரிவியூவை இழந்துள்ளார். 2 முறை அம்பயர் கால். 3 முறை மட்டுமே அவருக்கு எல்பிடபிள்யூ கொடுக்கப்பட்ட முடிவு திரும்பப்பெற்று அவர் தொடர்ந்து பேட்டிங் ஆடியுள்ளார். இதன்மூலம் 60% தவறான ரிவியூ எடுத்துள்ளார் கோலி.