ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் கேகேஆரும் ராஜஸ்தான் ராயல்ஸும் மோதுகின்றன. தொடர் தோல்விகளை தழுவிவரும் கேகேஆர் அணி வெற்றி வேட்கையில் இந்த போட்டியில் களமிறங்கியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நன்றாக ஆடிவரும் நிலையில், அதை தொடரும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.
மும்பை வான்கடேவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
கேகேஆர் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த சீசனில் ஓபனிங்கில் அதிரடியாக பேட்டிங் ஆடியதன் விளைவாக கேகேஆர் அணியால் வெங்கடேஷ் ஐயர் தக்கவைக்கப்பட்ட நிலையில், இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட சரியாக ஆடவில்லை. எனவே இந்த போட்டியில் அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அனுகுல் ராய் சேர்க்கப்பட்டுள்ளார். ஹர்ஷித்துக்கு பதிலாக ஷிவம் மாவி சேர்க்கப்பட்டுள்ளார்.
கேகேஆர் அணி:
ஆரோன் ஃபின்ச், பாபா இந்திரஜித் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, ரிங்கு சிங், அனுகுல் ராய், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், உமேஷ் யாதவ், டிம் சௌதி, ஷிவம் மாவி.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டேரைல் மிட்செல் நீக்கப்பட்டு, கருண் நாயர் சேர்க்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:
ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), கருண் நாயர், ஷிம்ரான் ஹெட்மயர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் சென்.
