லக்னோ அணிக்கு எதிரான 28ஆவது லீக் போட்டியின் போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் டாஸ் போடுவதற்கு முன்னதாக அந்த காயினுக்கு முத்தமிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

கொல்கத்தாவின் ஹோம் மைதானமான ஈடன் கார்டன் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 28ஆவது லீக் போட்டி நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பவுலிங் தேர்வு செய்தார். அப்போது டாஸ் போடுவதற்கு முன்னதாக காயினுக்கு முத்தமிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 45 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். பின்னர் எளிய இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சுனில் நரைன் மற்றும் அங்கிரிஷ் ரகுவன்ஷி இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி வரை அதிரடியாக விளையாடிய பிலிப் சால்ட் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். பிலிப் சால்ட் 47 பந்துகளில் 14 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 89 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 38 ரன்கள் சேர்த்தார்.

இறுதியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 15.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தான் இந்தப் போட்டியில் டாஸின் போது ஒரு முக்கியமான நிகழ்வு நடந்துள்ளது. டாஸ் காயின் முதலில் ஷ்ரேயாஸ் ஐயரிடம் கொடுக்கப்பட்டது. அதனை பெற்ற ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் அந்த காயினை மறைத்து கொண்டு அதற்கு முத்தமிட்டு, அதன் பிறகு காயினை சுண்டிவிட்டுள்ளார். இதில், டாஸ் வென்ற அவர், பவுலிங் தேர்வு செய்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தப் போட்டியிலும் வெற்றியும் பெற்றார். இதற்கு முன்னதாகவும் இது போன்று ஒரு போட்டியில் செய்துள்ளார். அந்தப் போட்டியில் வெற்றியும் பெற்றுள்ளார். 2 முத்தம் கொடுத்து 2 போட்டிகளில் வெற்றியை கண்டுள்ளார்.

Scroll to load tweet…