தோனி தோனி என்று ஆரவாரம் செய்த ரசிகர்கள் – சத்தம் தாங்க முடியாமல் காதை மூடிக் கொண்ட ரஸல்!

தோனி பேட்டிங் செய்ய மைதானத்திற்குள் வரும் போது ரசிகர்கள் தோனி தோனி என்று ஆரவாரம் செய்யவே சத்தம் தாங்க முடியாமல் பவுண்டரி லைனில் நின்றிருந்த ஆண்ட்ரே ரஸல் காதை மூடிக் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

KKR Star Andre Russell Closes ears to Deafening Cheers When MS Dhoni Enter into Bating rsk

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 22ஆவது லீக் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 வெற்றி, 2 தோல்வியோடு புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடம் பிடித்தது.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சிஎஸ்கே பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் திணறிய நிலையில் சொற்ப ரன்களில் வெளியேறினர். அதிகபட்சமாக கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 34 ரன்கள் எடுத்தார். இறுதியாக 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.

 

 

பின்னர் எளிய இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஷிவம் துபே மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். துபே 28 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது சிஎஸ்கேயின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவையிருந்தது. அடுத்து ரஹானே, ஜடேஜா, ரிஸ்வி என்று வரிசையாக வீரர்கள் இருந்த நிலையில், யார் வருவார் என்ற கேள்வி இருந்தது.

அப்போது, ரவீந்திர ஜடேஜா டிரெஸிங் ரூமிலிருந்து களமிறங்குவதற்கு தயாராக வந்தார். அவர் வருவதைப் பார்த்து அவர் தான் பேட்டிங் செய்ய போகிறார் என்று நினைத்தனர். ஆனால், அவர் வந்ததுமே அப்படியே திரும்ப சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் எம்.எஸ். தோனி களமிறங்கினர். ரசிகர்களை ஏமாற்றவே ஜடேஜா அப்படி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது ஒருபுறம் இருக்க தோனி களமிறங்கிய போது ரசிகர்கள் ஆரவாரம் செய்த நிலையில், பவுண்டரி லைனில் நின்றிருந்த ஆண்ட்ரே ரஸல் ரசிகர்கள் எழுப்பிய சத்தத்தை கேட்க முடியாமல் காதுகளை மூடிக் கொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. தோனி வந்த போது ரசிகர்கள் எழுப்பிய சத்தம் 123 டெசிபலாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios