ஐபிஎல் 15வது சீசனில் களமிறங்கும் கேகேஆர் அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம். 

ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலம் முடிந்துவிட்டது. அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்துவிட்டன. 

2 முறை சாம்பியனான கேகேஆர் அணி, ஏலத்திற்கு முன்பாக ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய நால்வரையும் தக்கவைத்த நிலையில், மெகா ஏலத்தில் ஷ்ரேயாஸ் ஐயரை ரூ.12.25 கோடிக்கு எடுத்து அவரை கேப்டனாக நியமித்துள்ளது.

மேலும் ஏலத்தில் அஜிங்க்யா ரஹானே, நிதிஷ் ராணா, சாம் பில்லிங்ஸ், பாட் கம்மின்ஸ், ஷிவ மாவி, உமேஷ் யாதவ், பாபா இந்திரஜித், சாமிகா கருணரத்னே, அலெக்ஸ் ஹேல்ஸ், டிம் சௌதி, அனுகுல் ராய் உள்ளிட்ட வீரர்களையும் ஏலத்தில் எடுத்தது.

ஐபிஎல் 14வது சீசனில் ஃபைனல் வரை சென்ற கேகேஆர் அணி, 15வது சீசனை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள நிலையில், 15வது சீசனில் களமிறங்கும் கேகேஆர் அணியின் சிறந்த ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.

இதையும் படிங்க - IPL 2022: அந்த இளம் வீரருக்கு லக்னோ அணி கோடிகளை கொட்டி கொடுத்தது ஏன்..? கம்பீர் விளக்கம்

இளம் இடது கை அதிரடி வீரரான வெங்கடேஷ் ஐயருடன், அனுபவ அஜிங்க்யா ரஹானே தொடக்க வீரராக இறங்குவார். நிதிஷ் ராணா 3ம் வரிசையிலும், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 4ம் வரிசையிலும் இறங்குவார்கள்.

விக்கெட் கீப்பர் சாம் பில்லிங்ஸ். அதன்பின்னர் அதிரடி ஆல்ரவுண்டர்கள் ஆண்ட்ரே ரசல் மற்றும் சுனில் நரைன் ஆகிய இருவரும் ஆடுவார்கள். ஆஸ்திரேலியாவின் ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் பாட் கம்மின்ஸ் முதன்மை ஃபாஸ்ட் பவுலராக ஆடுவார். அவருடன் ஷிவம் மாவி மற்றும் உமேஷ் யாதவ் ஆகிய இருவரும் ஃபாஸ்ட் பவுலர்களாக ஆடுவார்கள். சுனில் நரைனுடன் 2வது ஸ்பின்னராக வருண் சக்கரவர்த்தி ஆடுவார்.

கேகேஆர் அணியின் சிறந்த உத்தேச ஆடும் லெவன்:

வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரஹானே, நிதிஷ் ராணா, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், வருண் ஷிவம் மாவி, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.