கேகேஆர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் கேகேஆரும் ராஜஸ்தான் ராயல்ஸும் மோதுகின்றன. இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நன்றாக ஆடி வெற்றிகளை பெற்றுவருகிறது. ஆனால் இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கிய கேகேஆர் அணி, அதன்பின்னர் படுதோல்விகளை அடைந்து புள்ளி பட்டியலில் 8ம் இடத்தில் பின் தங்கியுள்ளது.

மும்பை வான்கடேவில் இன்று நடக்கும் போட்டியில், தொடர் தோல்விகளிலிருந்து மீண்டு வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் கேகேஆர் அணி களமிறங்குகிறது. இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

உத்தேச ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), டேரைல் மிட்செல், ஷிம்ரான் ஹெட்மயர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் சென்.

இந்த போட்டியிலாவது கேகேஆர் அணி, மேட்ச் வின்னரும் நட்சத்திர ஆல்ரவுண்டருமான பாட் கம்மின்ஸுக்கு வாய்ப்பளிக்குமா என்று பார்க்கவேண்டும். ஆனால் பெரும்பாலும் அதற்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

உத்தேச கேகேஆர் அணி:

ஆரோன் ஃபின்ச், வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, பாபா இந்திரஜித் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், உமேஷ் யாதவ், டிம் சௌதி, ஹர்ஷித் ரன்.