Asianet News TamilAsianet News Tamil

#IPL2021Auction கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பெயர் மாற்றம்..! கண்ணாடிய திருப்புனா ஆட்டோ எப்படிடா ஓடும்?

ஐபிஎல்லில் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, அணியின் பெயரை மாற்றுகிறது.
 

kings eleven punjab franchise is all set to change team name ahead of ipl 2021 auction
Author
Chennai, First Published Feb 16, 2021, 2:40 PM IST

ஐபிஎல்லில் இதுவரை 13 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக 5 முறை கோப்பையை வென்றுள்ளது. சிஎஸ்கே 3 முறையும், கேகேஆர் அணி 2முறையும் கோப்பையை வென்றுள்ளன.

இந்த அணிகளுக்கு நேர்மாறாக, ஆர்சிபி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய அணிகள் ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. ஐபிஎல்லில் எதையும் சாதிக்காக இந்த அணிகள், முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் ஒவ்வொரு சீசனிலும் களமிறங்கி ஏமாற்றத்துடனேயே வெளியேறுகிறது. 

13வது சீசனிலும் இந்த அணிகளால் கோப்பையை வெல்ல முடியவில்லை. எனவே வரவிருக்கும் 14வது சீசனை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கின்றன இந்த அணிகள். 14வது சீசனுக்கான ஏலம் வரும் 18ம் தேதி சென்னையில் நடக்கவுள்ளது.

இதற்கிடையே, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, அணியின் பெயரை பஞ்சாப் கிங்ஸ் என மாற்றுவதற்காக பிசிசிஐயிடம் கோரிக்கை விடுத்து, அதற்கான அனுமதியையும் பெற்றுவிட்டது. எனவே அடுத்த சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, பஞ்சாப் கிங்ஸ் என்ற பெயரில் ஆடவுள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் என்ற பெயரில் ராசியில்லை என்பதாக கருதி, ஒரு மாற்றத்திற்காக பஞ்சாப் கிங்ஸ் என பெயர் மாற்றம் செய்கிறது. கண்ணாடிய மாத்துனா மட்டும் பழுதான ஆட்டோ ஓடிருமா?

இதற்கு முன், டெல்லி டேர்டெவில்ஸ் அணி, டெல்லி கேபிடள்ஸ் என பெயர் மாற்றம் செய்தது குறிப்பிடத்தக்கது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios