கேகேஆர் அணியின் ஓய்வறை சூழலே சரியில்லை; முழுக்க முழுக்க எதிர்மறையாக இருக்கிறது என்று கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார். 

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களமிறங்கியுள்ள கேகேஆர் அணி இந்த சீசனை அபாரமாக தொடங்கியது. முதல் 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்றது. இந்த சீசனை வெற்றிகரமாக தொடங்கிய கேகேஆர் அணி, அதன்பின்னர் தொடர் தோல்விகளை தழுவிவருகிறது.

9 போட்டிகளில் வெறும் 3 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 8ம் இடத்தில் பின் தங்கியுள்ளது. இன்றைய போட்டியில் கேகேஆர் அணி ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொண்டு ஆடவுள்ள நிலையில், கேகேஆர் அணியின் ஓய்வறை சூழலே சரியில்லை என்று கெவின் பீட்டர்சன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள கெவின் பீட்டர்சன், மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் அதிர்ச்சியளித்தது. கேகேஆரின் நிலையும் மோசம். முதல் 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்ற கேகேஆர் அணி அதன்பின்னர் தொடர் தோல்விகளை தழுவிவருகிறது. இதுவரை 19 வீரர்களை விளையாட வைத்திருக்கிறது அந்த அணி. இது மிக திகம்.

கேகேஆர் அணியின் ஓய்வறை சூழல், குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஓய்வறை சூழலுக்கு முற்றிலும் எதிர்மாறாக உள்ளது. கேகேஆர் அணியின் ஓய்வறை சூழல் முழுக்க முழுக்க நெகட்டிவாக உள்ளது. மும்பை மற்றும் கேகேஆர் அணிகள் தான் இந்த சீசனில் எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது என்று பீட்டர்சன் தெரிவித்தார்.