Asianet News TamilAsianet News Tamil

Legends League Cricket: 38 பந்தில் 86 ரன் அடித்த பீட்டர்சன்! 41 வயசுலயும் மனுஷன் காட்டடி அடிச்சு மிரட்டிட்டார்

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் வேர்ல்ட் ஜெயிண்ட்ஸ் அணி வீரர் கெவின் பீட்டர்சனின் காட்டடியால் ஆசியா லயன்ஸ் அணியை வீழ்த்தியது வேர்ல்ட் ஜெயிண்ட்ஸ் அணி.
 

kevin pietersen 38 ball 86 runs knock helps world giants to beat asia lions in legends league cricket
Author
Al-Amerat, First Published Jan 27, 2022, 6:57 PM IST

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற வீரர்கள் கலந்துகொண்டு விளையாடும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் ஓமனில் நடந்துவருகிறது. ஆசியா லயன்ஸ் மற்றும் வேர்ல்ட் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வேர்ல்ட் ஜெயிண்ட்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய ஆசியா லயன்ஸ் அணி 20 ஓவரில் 149 ரன்கள் அடித்தது ஆசியா லயன்ஸ் அணி. அந்த அணியில் அதிகபட்சமாக ஆஃப்கானிஸ்தான் முன்னாள் கேப்டன் அஸ்கார் ஆஃப்கான் 26 பந்தில் 41 ரன்கள் அடித்தார்.

இதையடுட்து 150 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வேர்ல்ட் ஜெயிண்ட்ஸ் அணியின் தொடக்க வீரரான கெவின் பீட்டர்சன், தொடக்கம் முதலே பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆடினார். காட்டடி அடித்த கெவின் பீட்டர்சன், 38 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 86 ரன்களை குவித்தார். பீட்டர்சனின் காட்டடியால் 13வது ஓவரிலேயே 150 ரன்கள் என்ற இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வேர்ல்ட் ஜெயிண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.

41 வயதான கெவின் பீட்டர்சன், இந்த வயதிலும், அவர் ஆடிய காலத்தில் எப்படி ஆடினாரோ அதேபோலவே அடித்து ஆடி மிரட்டினார். அவரது பேட்டிங்கை கண்ட ரசிகர்கள், அவர் இப்போதும் கூட ஐபிஎல்லில் ஆடலாம் என்று கருத்து பதிவிட்டு தெறிக்கவிடுகின்றனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios