கொரோனா அச்சுறுத்தலால் கிரிக்கெட் வீரர்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், முன்னாள், இந்நாள் வீரர்கள் பலரும் ஆல்டைம் உலக லெவன், ஆல்டைம் ஐபிஎல் லெவன் உள்ளிட்ட சிறந்த அணிகளை தேர்வு செய்துவருகின்றனர். 

அந்தவகையில், இந்திய கிரிக்கெட் வீரரும் சிஎஸ்கே அணியின் இடம்பெற்றுள்ளவருமான கரன் ஷர்மா, தனது ஆல்டைம் ஐபிஎல் லெவனை தேர்வு செய்துள்ளார். கரன் ஷர்மா, ஐபிஎல்லில் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே ஆகிய அணிகளில் ஆடியுள்ளார். 2018லிருந்து சிஎஸ்கே அணியில் ஆடிவருகிறார். 

இந்நிலையில், அவர் தேர்வு செய்த ஆல்டைம் ஐபிஎல் லெவனை பார்ப்போம். தனது ஆல்டைம் ஐபிஎல் லெவனின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகிய இருவரையும் தேர்வு செய்த கரன் ஷர்மா, மூன்றாம் வரிசையில் ஐபிஎல்லில் அதிக ரன்களை குவித்த கோலியையும் நான்காம் வரிசை வீரராக, இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரரான சுரேஷ் ரெய்னாவையும் தேர்வு செய்துள்ளார். 

விக்கெட் கீப்பராக தனது தற்போதைய கேப்டன் தோனியை தேர்வு செய்த கரன் ஷர்மா, அவரையே கேப்டனாகவும் தேர்வு செய்துள்ளார். ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் ட்வைன் பிராவோ ஆகிய இருவரையும் ஸ்பின்னர்களாக சீனியர் ஸ்பின்னர்களான ஹர்பஜன் சிங் மற்றும் அமித் மிஸ்ரா ஆகிய இருவரையும் ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். 

கரன் ஷர்மா தேர்வு செய்த ஆல்டைம் ஐபிஎல் லெவன்:

கிறிஸ் கெய்ல், ரோஹித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ட்வைன் பிராவோ, அமித் மிஸ்ரா, ஹர்பஜன் சிங், புவனேஷ்வர் குமார், பும்ரா.