Asianet News TamilAsianet News Tamil

ஒவ்வொரு முறையும் இந்த ரன் அவுட் சர்ச்சை ஆகிறது.. ரூல்ஸை இந்த மாதிரி மாத்துங்க..! தீர்வு கூறும் கபில் தேவ்

மன்கட் ரன் அவுட் ஒவ்வொரு முறையும் சர்ச்சையாகும் நிலையில், அதற்கு கபில் தேவ் ஒரு தீர்வு கூறியுள்ளார்.
 

kapil dev suggests a solution for mankad run out controversies
Author
First Published Sep 27, 2022, 6:00 PM IST

கிரிக்கெட்டில் பவுலிங் முனையில் நிற்கும் பேட்ஸ்மேன், பவுலர் பந்துவீசுவதற்கு முன்பாக க்ரீஸை விட்டு நகர்ந்தால் பவுலர் ரன் அவுட் செய்யலாம். அதற்கு மன்கட் ரன் அவுட் என்று பெயர். இந்த மன்கட் ரன் அவுட் விதிப்படி சரிதான் என்றாலும், தார்மீக ரீதியில் தவறு என்கிற வகையில் பவுலர்கள் பெரிதாக இந்தவிதத்தில் ரன் அவுட் செய்வதில்லை.

ஆனால் ஐபிஎல்லில் ரவிச்சந்திரன் அஷ்வின் ஜோஸ் பட்லரை மன்கட் ரன் அவுட் செய்தபோதுதான் இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. அது பெரும் விவாதப்பொருளாகவும் ஆனது. அதன்பின் சில வீரர்கள் மன்கட் ரன் அவுட் செய்தனர்.  ஒவ்வொரு முறை மன்கட் ரன் அவுட் செய்யப்படும்போதும் பெரும் விவாதமே நடக்கும்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ஷமி..! கடைசி நேரத்தில் அதிரடி மாற்றம்

அதை தடுக்கும் வகையில், மன்கட் ரன் அவுட்டை முறையான ரன் அவுட் என்று விதியை மாற்றியது எம்.சி.சி. அதனால் விதிப்படி அந்த ரன் அவுட் செல்லும். எம்.சி.சி அந்த ரன் அவுட்டை அதிகாரப்பூர்வ ரன் அவுட் என்று அங்கீகரித்த பின்பும் கூட, அந்த ரன் அவுட் சர்ச்சையாகவே உள்ளது.

மகளிர் கிரிக்கெட்டில் இந்தியா - இங்கிலாந்து இடையேயான போட்டியில் டீன் என்ற இங்கிலாந்து வீராங்கனையை ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா மன்கட் ரன் அவுட் செய்தார். அது விதிப்படி சரிதான் என்றபோதிலும், முன்னாள், இந்நாள் வீரர்கள் வீராங்கனைகள் பலரும் விமர்சனம் செய்தனர்.

இதையடுத்து இது பெரும் சர்ச்சையாக வெடித்து, பெரும் விவாதப்பொருளாக உருவான நிலையில், இதற்கு கபில் தேவ் தீர்வு கூறியுள்ளார்.

இதையும் படிங்க - அந்த ஒரு விஷயத்துல எவ்வளவு முக்குனாலும் அக்ஸர் படேலால் ஜடேஜாவின் இடத்தை நிரப்பமுடியாது! முன்னாள் வீரர் கருத்து

இதுகுறித்து பேசிய கபில் தேவ், ஒவ்வொரு முறையும் இந்த விவகாரத்தில் பெரும் விவாதமே எழுகிறது. எனவே எளிதான விதியாக இருக்கவேண்டும். பவுலர் பந்துவீசுவதற்கு முன் பேட்ஸ்மேன் க்ரீஸை விட்டு நகர்ந்தால், பேட்டிங் அணியின் ஒரு ரன்னை குறைக்கலாம் என்று கபில் தேவ் கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios