Asianet News TamilAsianet News Tamil

இந்த 6 பேரில் ஒருவர் தான் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர்.. வெள்ளிக்கிழமை இண்டர்வியூ

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 2000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்ததாக தகவல் வெளிவந்தது. அதில் முக்கியமானவர்களாக டாம் மூடி, மைக் ஹெசன், ராபின் சிங் ஆகியோரின் பெயர்கள் இருந்தன. 

kapil dev led cac to interview 6 candidates for team indias head coach
Author
India, First Published Aug 13, 2019, 10:01 AM IST

இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவின் பதவிக்காலம் நடப்பு வெஸ்ட் இண்டீஸ் தொடருடன் முடிவடைகிறது. இதையடுத்து ஏற்கனவே பிசிசிஐ, இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்களை பெற்றது. 

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 2000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்ததாக தகவல் வெளிவந்தது. அதில் முக்கியமானவர்களாக டாம் மூடி, மைக் ஹெசன், ராபின் சிங் ஆகியோரின் பெயர்கள் இருந்தன. 

kapil dev led cac to interview 6 candidates for team indias head coach

இந்த 2000 விண்ணப்பங்களையும் அலசி ஆராய்ந்து அவற்றிலிருந்து 6 பேர் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளனர். டாம் மூடி, மைக் ஹெசன், ராபின் சிங், ஃபில் சிம்மன்ஸ், லால்சந்த் ராஜ்பூத் மற்றும் தற்போதைய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. இவர்கள் 6 பேரும் தான் இண்டர்வியூ செய்யப்படவுள்ளனர். 

kapil dev led cac to interview 6 candidates for team indias head coach

கபில் தேவ் தலைமையிலான கெய்க்வாட் மற்றும் சாந்தா ரங்கசாமி அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக்குழு, இந்த 6 பேரையும் வரும் வெள்ளிக்கிழமை நேர்காணல் செய்யவுள்ளது. இந்த நேர்காணல் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் நடக்கவுள்ளது. வெளிநாட்டு வீரர்கள் நேரில் கலந்துகொள்ள முடியாது என்பதால், அவர்களுக்கு வீடியோ கால் மூலம் நேர்காணல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

kapil dev led cac to interview 6 candidates for team indias head coach

தலைமை பயிற்சியாளரை மட்டும் தான் கிரிக்கெட் ஆலோசனைக்குழு நேர்காணல் செய்து தேர்வு செய்யும். மற்ற பயிற்சியாளர்களை பிசிசிஐ-யே தேர்வு செய்யும். பேட்டிங் பயிற்சியாளர் பதவிக்கு பிரவீன் ஆம்ரே விண்ணப்பித்துள்ளார். ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு ஜாண்டி ரோட்ஸ் விண்ணபித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Follow Us:
Download App:
  • android
  • ios