இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. முதலில் 3 ஒருநாள் போட்டிகளும் அதைத்தொடர்ந்து 3 டி20 போட்டிகளும் கடைசியாக 4 டெஸ்ட் போட்டிகளும் நடக்கவுள்ளன. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடும் இந்திய கேப்டன் விராட் கோலி, முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் ஆடிவிட்டு இந்தியா திரும்புகிறார்.

விராட் கோலிக்கு குழந்தை பிறக்கவுள்ளதால், அவர் கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடாமல், நாடு திரும்புகிறார். தோனி குழந்தை பிறந்தபோது, நாட்டுக்காக ஆடினார். ஆனால் கோலி நாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்ற விமர்சனங்கள் எழுந்ததுடன், கோலி முழு தொடரிலும் ஆட வேண்டும் என்ற வலியுறுத்தல்களும் எழுந்தன.

இந்நிலையில், கோலிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் கபில் தேவ். இதுகுறித்து பேசிய கபில் தேவ், கோலி இந்தியாவிற்கு வந்துவிட்டு மீண்டு ஆஸ்திரேலியாவிற்கு திரும்ப நம்மால் ஏற்பாடு செய்யமுடியாது. கவாஸ்கர் அவருக்கு குழந்தை பிறந்து சில மாதங்கள் வரை குழந்தையை பார்க்கவில்லை. அப்போதைய நிலை வேறு; இப்போதைய சூழல் வேறு. கோலி அவரது தந்தை இறந்தபோது, மறுநாளே கிரிக்கெட் ஆட வந்துவிட்டார் கோலி. ஆனால் இப்போது அவருக்கு குழந்தை பிறக்கவுள்ள நிலையில், விடுமுறை கேட்டிருக்கிறார். இதில் தவறொன்றுமில்லை.

3 நாட்களில் கோலி இந்தியா சென்றுவிட்டு ஆஸ்திரேலியாவிற்கு திரும்ப வேண்டுமென்றால், சொந்தமாகத்தான் விமானம் வாங்க வேண்டும். நமது விளையாட்டு வீரர்கள் அப்படியொரு நிலையை இப்போது எட்டிவிட்டார்கள் என்ற நிலையை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் அவர் குழந்தை பிறப்புக்காக ஊருக்கு திரும்புவதற்கு ஆதவாகவும் பேசியுள்ளார் கபில் தேவ்.