Asianet News TamilAsianet News Tamil

T20 World Cup ஃபைனல்: கேன் வில்லியம்சன் காட்டடி பேட்டிங்..! ஆஸி.,க்கு மிக சவாலான இலக்கை நிர்ணயித்த நியூசி.,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலக கோப்பை ஃபைனலில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி, கேப்டன் வில்லியம்சனின் அதிரடியான பேட்டிங்கால் (48 பந்தில் 85 ரன்கள்) 20 ஓவரில்  ரன்களை குவித்த நியூசிலாந்து அணி,    ரன்கள் என்ற சவாலான இலக்கை ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

kane williamson amazing batting helps new zealand to set very challenging target to australia in t20 world cup final
Author
Dubai - United Arab Emirates, First Published Nov 14, 2021, 9:23 PM IST

டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி துபாயில் நடந்துவருகிறது. நியூசிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

நியூசிலாந்து அணியில் காயத்தால் வெளியேறிய விக்கெட் கீப்பர் டெவான் கான்வேவிற்கு பதிலாக டிம் சேஃபெர்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த ஒரு கட்டாய மாற்றத்தை தவிர வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

நியூசிலாந்து அணி:

மார்டின் கப்டில், டேரைல் மிட்செல், கேன் வில்லியம்சன் (கேப்டன்), க்ளென் ஃபிலிப்ஸ், ஜிம்மி நீஷம், டிம் சேஃபெர்ட் (விக்கெட் கீப்பர்), மிட்செல் சாண்ட்னெர், டிம் சௌதி, இஷ் சோதி, டிரெண்ட் போல்ட், ஆடம் மில்னே.

ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டிகளில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் அந்த அணி  களமிறங்கியது.

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டேரைல் மிட்செல் 11 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் மார்டின் கப்டிலும், கேப்டன் கேன் வில்லியம்சனும் இணைந்து 10 ஓவர்கள் வரை விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் நிதானமாக ஆடினர். அதனால் அந்த அணியின் ஸ்கோர் வேகமெடுக்கவில்லை.

10 ஓவரில் நியூசிலாந்து அணி வெறும் 57 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. கேன் வில்லியம்சன் 21 பந்தில் 21 ரன்கள் அடித்திருந்தபோது மிட்செல் ஸ்டார்க்கின் பந்தில் அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஜோஷ் ஹேசில்வுட் தவறவிட, அதன்பின்னர் பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக அடி நொறுக்கினார் வில்லியம்சன்.

மார்டின் கப்டில் 35 பந்தில் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் தொடர்ச்சியாக அடித்து ஆடிய கேன் வில்லியம்சன், மேக்ஸ்வெல், ஸ்டார்க் ஆகிய இருவரின் பவுலிங்கையும் வெளுத்துவாங்கினார். இதற்கிடையே ஃபிலிப்ஸ்  17 பந்தில் 18 ரன்கள் மட்டுமே அடித்தார். மறுமுனையில் பெரியளவில் ஒத்துழைப்பு எதுவுமே இல்லாதபோதிலும், கேன் வில்லியம்சன் தனி நபராக அடித்து ஆடி, 48 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 85 ரன்கள் அடித்து 18வது ஓவரில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.

ஹேசில்வுட் கேட்ச்சை கோட்டைவிட்ட பின்னர் 27 பந்தில் 64 ரன்களை குவித்தார் வில்லியம்சன். கடைசி 2 ஓவர்களில் ஜிம்மி நீஷம் ஒரு சிக்ஸரும், டிம் சேஃபெர்ட் ஒரு பவுண்டரியும் மட்டுமே அடிக்க, 20 ஓவரில் 172 ரன்களை குவித்த நியூசிலாந்து அணி, 173 ரன்கள் என்ற சவாலான இலக்கை ஆஸ்திரேலியாவுக்கு நிர்ணயித்துள்ளது.  இறுதிப்போட்டியில், அதுவும் மிகச்சிறந்த பவுலிங் யூனிட்டை கொண்ட நியூசிலாந்து அணிக்கு எதிராக 173 ரன்கள் என்ற இலக்கை விரட்டுவது ஆஸ்திரேலிய அணிக்கு மிக சவாலான காரியம்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios