Asianet News TamilAsianet News Tamil

பாகிஸ்தான் அணியின் தொடர் படுதோல்வி எதிரொலி.. பிரதமர் இம்ரான் கான் அதிரடி நடவடிக்கை..?

உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி படுமோசமாக ஆடிவருகிறது. உலக கோப்பையில் மட்டுமல்ல; சாம்பியன்ஸ் டிராபிக்கு பின்னர் பாகிஸ்தான் அணி சரியாக ஆடவேயில்லை.
 

kamran akmal requested prime minister imran khan to take action to improve pakistan cricket
Author
Pakistan, First Published Jun 21, 2019, 11:46 AM IST

உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி படுமோசமாக ஆடிவருகிறது. உலக கோப்பையில் மட்டுமல்ல; சாம்பியன்ஸ் டிராபிக்கு பின்னர் பாகிஸ்தான் அணி சரியாக ஆடவேயில்லை.

உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக மட்டுமே பாகிஸ்தான் வென்றது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி வென்றது. ஆனால் இலக்கை விரட்டிய எந்த போட்டியிலும் வெல்லவில்லை. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் வெறும் 105 ரன்கள் மட்டுமே அடித்து ஆல் அவுட்டானது. 

இந்திய அணிக்கு எதிராக போராடமலேயே தோல்வியை தழுவியது. பாகிஸ்தான் அணியிடம் டீம் ஸ்பிரிட்டே இருப்பது போன்று தெரியவில்லை. அந்த அணி இந்தியாவுக்கு எதிராக போராடாமல் மோசமாக தோற்றது. 

kamran akmal requested prime minister imran khan to take action to improve pakistan cricket

பாகிஸ்தான் அணி படுமோசமாக இருப்பதற்கு வலுவான கேப்டன் இல்லாததும் அதற்கு ஒரு காரணம். சர்ஃபராஸ் அகமது உத்தி ரீதியாகவும் கள வியூகத்திலும் கைதேர்ந்தவராக இல்லை. இந்தியாவுக்கு எதிரான தோல்வியை அடுத்து பாகிஸ்தான் அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. ரசிகர்கள் தாறுமாறாக விமர்சித்தனர். சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் வீரர்கள் வைத்து செய்யப்பட்டனர். 

குறிப்பாக கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவின் கேப்டன்சி, ஃபிட்னெஸ் ஆகியவை கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த கேப்டன் சர்ஃபராஸை, மூளையில்லாத கேப்டன் என ஷோயப் அக்தர் கடுமையாக விமர்சித்திருந்தார். 

kamran akmal requested prime minister imran khan to take action to improve pakistan cricket

பாகிஸ்தான் வீரர்கள், எங்களை விட்ருங்க என்று கெஞ்சும் அளவிற்கு ரசிகர்கள் தாறுமாறாக விமர்சித்தனர். ரசிகர்கள் கூட விமர்சனத்தை நிறுத்திவிட்ட நிலையில், முன்னாள் வீரர்களின் விமர்சனங்கள் நின்றபாடில்லை. 

பாகிஸ்தான் அணியையும் கேப்டன் சர்ஃபராஸையும் முன்னாள் வீரர்கள் பலர் கடுமையாக விமர்சித்துவரும் நிலையில், முன்னாள் வீரர் காம்ரான் அக்மல், பாகிஸ்தான் அணியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமரும் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கானுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

kamran akmal requested prime minister imran khan to take action to improve pakistan cricket

இதுகுறித்து பேசியுள்ள காம்ரான் அக்மல், பாகிஸ்தான் அணி உலக கோப்பையில் மோசமாக ஆடிவருகிறது. பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கில் சொதப்பிவருகிறது. பாகிஸ்தான் அணியை மேம்படுத்த பிரதமரும் உலக கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான் அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இயல்பாகவே அபாரமான கிரிக்கெட் வீரர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட நாடு பாகிஸ்தான். எனவே அதுபோன்ற இளம் திறமைகளை கண்டறிந்து அணியில் எடுக்க வேண்டும். பாகிஸ்தான் அணியை தரமான அணியாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios