Asianet News TamilAsianet News Tamil

உண்மை எப்போதுமே கசக்கத்தான் செய்யும்.. அதிருப்தியை காட்டமாக காட்டிய பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர்

உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து நீக்கப்பட்ட ஃபாஸ்ட் பவுலர் ஜுனைத் கான், தனது அதிருப்தியை மிகவும் காட்டமாக வெளிப்படுத்தியுள்ளார். 

junaid khan revealed his discontent after dropped from world cup squad
Author
Pakistan, First Published May 21, 2019, 11:36 AM IST

2019 உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து அணிதான் வெல்லும் என்று பெரும்பாலான ஜாம்பவான்களின் கருத்தாக உள்ளது. 

ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளும் வலுவாக உள்ளன. இங்கிலாந்தில் நடந்த 2009 டி20 உலக கோப்பை, 2017 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய தொடர்களை பாகிஸ்தான் அணி வென்றதால், இங்கிலாந்தில் நன்றாக ஆடிவரும் பாகிஸ்தான் அணியும் சிறந்த அணியாக பார்க்கப்பட்டது. 

ஆனால் உலக கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்து அணியிடம் ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆகியிருப்பது பாகிஸ்தான் அணியை நிலைகுலைய செய்துள்ளது. 340 ரன்களுக்கு மேல் குவித்தும் கூட பாகிஸ்தான் அணியால் சில போட்டிகளில் வெல்ல முடியவில்லை. எதிரணியான இங்கிலாந்தை போட்டிக்கு போட்டி 350 ரன்களுக்கு மேல் குவிக்கவிட்டது பாகிஸ்தான். பாகிஸ்தான் அணியின் பேட்டிங் நன்றாக இருக்கிறது. ஆனால் பவுலிங்கும் ஃபீல்டிங்கும் மோசமாக இருக்கிறது. 

junaid khan revealed his discontent after dropped from world cup squad

இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் அடிப்படையில், உலக கோப்பை அணியில் 3 மாற்றங்களை செய்தது பாகிஸ்தான் அணி. அபித் அலிக்கு பதிலாக ஆசிஃப் அலியும் ஃபஹீம் அஷ்ரஃபுக்கு பதிலாக முகமது அமீரும் ஜுனைத் கானுக்கு பதிலாக வஹாப் ரியாஸும் அணியில் சேர்க்கப்பட்டனர்.

junaid khan revealed his discontent after dropped from world cup squad

உலக கோப்பை அணியில் எடுக்கப்பட்டு பின்னர் நீக்கப்பட்டதால் அதிருப்தியடைந்த ஜுனைத் கான் வாயில் கருப்பு நிற டேப் போட்டு மூடிய புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டு, நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. உண்மை எப்போதுமே கசக்கத்தான் செய்யும் என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். 

junaid khan revealed his discontent after dropped from world cup squad

2017ல் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் அணி வென்றதற்கு ஜுனைத் கானின் சிறந்த பவுலிங்கும் ஒரு காரணம். ஜுனைத் கான் அந்த தொடரில் அபாரமாக பந்துவீசினார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 4 போட்டிகளில் பந்துவீசி 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 2 போட்டிகளில் ஆடி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் எகானமி 8க்கு மேல் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios