Asianet News TamilAsianet News Tamil

டி20 உலக கோப்பையில் எங்களுக்கு டஃப் கொடுக்கவல்ல அணி இதுதான்..! இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் ஓபன் டாக்

டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு கடும் போட்டியாளராக எந்த அணி இருக்கும் என்று ஜோஸ் பட்லர் கூறியுள்ளார்.
 

jos buttler names which team will be the competitor for england in t20 world cup
Author
England, First Published Oct 4, 2021, 5:17 PM IST

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கிறது. டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.

இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக பார்க்கப்படுகின்றன. உலக கோப்பை நடக்கும் ஐக்கிய அரபு அமீரக கண்டிஷன் பாகிஸ்தானுக்கு நன்கு பழக்கப்பட்டது என்பதால் அந்த அணியும் சிறப்பாக ஆடும் என்றும் மதிப்பிடப்படுகிறது.

ஆனாலும் இந்தியா, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 3 அணிகளுக்குமே கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகமுள்ளது. இதுவரை ஒரு ஐசிசி கோப்பையைக்கூட வென்றதில்லை என்ற விமர்சனத்தை உடைத்தெறிய இந்த கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற தீவிரத்தில் உள்ளார் விராட் கோலி. ரோஹித், ராகுல், கோலி, ரிஷப், சூர்யகுமார் யாதவ் என இந்திய அணி அதிரடியான பேட்டிங் ஆர்டரையும், பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி, தீபக் சாஹர் என மிரட்டலான பவுலிங் யூனிட்டையும் பெற்று இந்திய அணி வலுவாக திகழ்கிறது.

இதையும் படிங்க - IPL 2021 SRH வீரர்களும் தூக்க மாத்திரையும் ஒண்ணு..! அவங்க பேட்டிங் ஆடும்போது தூங்கிட்டேன்..! சேவாக் செம கலாய்

ஒயின் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடிவருகிறது. வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. 2019ல் முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி, டி20 உலக கோப்பையையும் வெல்லும் முனைப்பில் உள்ளது.

jos buttler names which team will be the competitor for england in t20 world cup

பொல்லார்டு, கெய்ல், பிராவோ, ஆண்ட்ரே ரசல் என டி20 கிரிக்கெட்டில் நீண்ட நெடிய அனுபவம் கொண்ட மிரட்டலான அதிரடி வீரர்களை பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, டி20 கிரிக்கெட்டில் எப்போதுமே டாப் கிளாஸ் அணி. பூரன், ஹெட்மயர் ஆகிய இளம் அதிரடி வீரர்களையும் பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியும் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்படுகிறது.

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் கடந்த சில ஆண்டுகளாக சிறந்த கிரிக்கெட்டை ஆடிவருகிறது. எனவே டி20 உலக கோப்பையில் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.

இதையும் படிங்க - மெண்டல் டார்ச்சர்னா என்னனு முதல்ல தெளிவா சொல்லுப்பா முகமது ஆமீர்..! வக்கார் யூனிஸ் செம காட்டம்

இப்படியாக இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் வலுவான அணிகளாக திகழும் நிலையில், வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஆக்ரோஷமான கிரிக்கெட் ஆடிவரும் வலுவான இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர், தங்கள் அணிக்கு கடும் சவாலாக எந்த அணி திகழும் என்று கூறியுள்ளார்.

டி20 உலக கோப்பை குறித்து பேசியுள்ள ஜோஸ் பட்லர், நாங்கள் வலுவான அணியாக திகழ்கிறோம். ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் ஆகிய 2 சூப்பர் ஸ்டார்களை கண்டிப்பாக மிஸ் செய்வோம். ஆனால் மேலும் சில மேட்ச் வின்னர்கள் எங்கள் அணியில் இருக்கிறார்கள். இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 2 அணிகளும் வலுவான அணிகளாக திகழ்கின்றன. இந்த 2 அணிகளும் கண்டிப்பாக எங்களுக்கு கடும் சவாலளிக்கும் அணிகளாக இருக்கும் என்று பட்லர் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios