Asianet News TamilAsianet News Tamil

இயன் மோர்கனுக்கு தடை.. இங்கிலாந்து கேப்டன் யார் தெரியுமா..?

இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. மூன்றாவது போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 358 ரன்களை குவித்தது. 359 ரன்கள் என்ற இலக்கை 45வது ஓவரிலேயே எட்டி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்று 2-0 என முன்னிலை வகிக்கிறது. 
 

jos buttler might be return as captain for england in fourth odi against pakistan
Author
England, First Published May 17, 2019, 1:31 PM IST

உலக கோப்பை 3ம் தேதி தொடங்க உள்ள நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி ஆடிவருகிறது. 

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டி முடிவில்லாமல் முடிந்தது. இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. மூன்றாவது போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 358 ரன்களை குவித்தது. 359 ரன்கள் என்ற இலக்கை 45வது ஓவரிலேயே எட்டி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்று 2-0 என முன்னிலை வகிக்கிறது. 

jos buttler might be return as captain for england in fourth odi against pakistan

இந்த போட்டியில் பந்துவீச இங்கிலாந்து அணி அதிகமாக நேரம் எடுத்துக்கொண்டது. கடந்த பிப்ரவரி மாதம் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒரு போட்டியில் இங்கிலாந்து அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டது. அந்த சம்பவம் நடந்து ஓராண்டிற்குள்ளாக மீண்டும் பந்துவீச அதிகநேரம் எடுத்துக்கொண்டதால், இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கனுக்கு ஒரு போட்டியில் ஆட ஐசிசி தடை விதித்துள்ளது. மேலும் இயன் மோர்கனுக்கு போட்டி ஊதியத்தில் 40 சதவிகிதமும் மற்ற இங்கிலாந்து வீரர்களுக்கு 20 சதவிகிதமும் அபராதம் விதிக்கப்பட்டது. 

jos buttler might be return as captain for england in fourth odi against pakistan

அதனால் பாகிஸ்தானுக்கு எதிராக டிரெண்ட் பிரிட்ஜில் இன்று நடக்கும் நான்காவது போட்டியில் இயன் மோர்கன் ஆடமாட்டார். அதனால் ஜோஸ் பட்லர் கேப்டனாக செயல்படுவார் என்று தெரிகிறது. அதேபோல கடந்த போட்டியில் சதமடித்த பேர்ஸ்டோ, வலைப்பயிற்சியில் ஈடுபடாததால் இன்றைய போட்டியில் அவர் ஆடமாட்டார் என்று தெரிகிறது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios