Asianet News TamilAsianet News Tamil

2 வாய்ப்பையும் கோட்டைவிட்ட பாகிஸ்தான்..! வெற்றிக்கு அருகில் இங்கிலாந்து

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றியை நெருங்கிவிட்டது. 
 

jos buttler and chris woakes responsible batting confirms england win against pakistan in first test
Author
Manchester, First Published Aug 8, 2020, 10:23 PM IST

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்கள் அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 219 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. 

109 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணி, வலுவான நிலையில் இருந்ததால், இரண்டாவது இன்னிங்ஸில் 250-300 ரன்கள் அடித்திருந்தாலே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால் முதல் இன்னிங்ஸில் நன்றாக ஆடி சதமடித்த ஷான் மசூத், அரைசதம் அடித்த பாபர் அசாம் என யாருமே 2வது இன்னிங்ஸில் சரியாக ஆடவில்லை. அதனால் வெறும் 169 ரன்களுக்கே சுருண்டது பாகிஸ்தான் அணி. 

முதல் இன்னிங்ஸில் வலுவான முன்னிலை பெற்றும், இரண்டாவது இன்னிங்ஸில் சொதப்பி வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட பாகிஸ்தான் அணி, நான்காம் நாளான இன்றைய ஆட்டத்தின் தொடக்கத்திலேயே 277 ரன்கள் என்ற இலக்கை விரட்ட தொடங்கியது இங்கிலாந்து. 

2 நாட்கள் ஆட்டம் எஞ்சியிருந்ததால் இங்கிலாந்து அணி எளிதாக வென்றுவிடும் சூழல் இருந்தது. ஆனால் அவ்வளவு எளிதாக வெற்றியை தாரைவார்க்க மாட்டோம் என்கிற ரீதியில், பாகிஸ்தான் பவுலர்கள் ஆரம்பத்தில் அருமையாக வீசி, ரோரி பர்ன்ஸ், சிப்ளி, பென் ஸ்டோக்ஸ் ஆகியோரை சொற்ப ரன்களில் வீழ்த்தினர். நன்றாக ஆடிய கேப்டன் ரூட்டையும் 42 ரன்களில் வீழ்த்தினர். ஓலி போப்பையும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற்றியதையடுத்து, இங்கிலாந்து அணி 117 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. எனவே மீண்டும் பாகிஸ்தானுக்கு ஒரு வெற்றி வாய்ப்பு உருவானது. 

ஆனால் இம்முறையும் அந்த வாய்ப்பை தவறவிட்டனர். 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தான் அணி, ஃபார்மில் இல்லாத பட்லர் மற்றும் வோக்ஸ் ஆகிய இருவரையும் களத்தில் நிலைக்கவிட்டு, அரைசதம் அடிக்க விட்டனர். தொடர்ச்சியாக பல இன்னிங்ஸ்களில் சரியாக ஆடாத பட்லர், அணியில் தனக்கான இடத்தை தக்கவைக்க ஒரு நல்ல இன்னிங்ஸை ஆடியாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த நிலையில், இந்த இன்னிங்ஸை அதற்கானதாக பயன்படுத்தி கொண்டார். பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்தார். அதேபோல பவுலிங்கில் அசத்தினாலும் அண்மைக்காலமாக பேட்டிங்கில் சொதப்பிவந்த வோக்ஸும் இந்த இன்னிங்ஸை அருமையாக ஆடி அரைசதம் அடித்தார். இந்த ஜோடியை பாகிஸ்தான் பவுலர்களால் பிரிக்கவே முடியவில்லை. எனவே இங்கிலாந்து அணி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios